இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல்னு போனதும், ஸ்டெதஸ்கோப்போட கையில எடுத்த டாக்டர்… ’ஸ்டெத் பெல்’ல என் நெஞ்சுல வச்சுட்டு ”என்னப்பா இதய துடிப்பு டம்மு டிம்முன்னு அடிக்குது”னு கேட்டாரு..
அவர உத்து பாத்துட்டு, ”நீங்க காதுல வைக்க வேண்டிய ஏர் டிப்ஸ வைக்கவே இல்லயே”னு சொன்னேன்..
அதுக்கு அவரு, “ஒரு லக்கணத்தில் ஒன்பது கிரகணமும் உச்சம் பெற்ற ஒருவனுக்கு காதில் வைக்காமலும் கேட்கும், எப்படி வேண்டுமானாலும் கேட்கும். கண்டுக்காதே’னு உன்னை நினைத்து சார்லி மாதிரி சொல்லிட்டு சிரிக்குறாரு…
இவரு டாக்டரா… கம்பவுண்டரானு குழப்பத்துல மாத்திர கூட வேண்டாம்னு ஓடி வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோழியின் கிறுக்கல்!!
“ஒழுங்கா நடவடிக்கை எடுங்க”ன்னு சொன்ன பிறகு,
ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க போல!!
பரமசிவம் ராமசாமி
வாழ்க்கையில் நம்மை எப்போதும் உறுத்தும் இரண்டு விசயங்கள்..
ஒண்ணு செய்திருக்கலாம்…இன்னொண்ணு செய்யாது இருந்திருக்கலாம்..

balebalu
முதல் நாள் முதல் கையெழுத்து ங்குற கோஷமே
எப்போதும் காதுல ஒலிச்சிட்டு இருக்கு
அதான் ஸ்டெதஸ்கோப்ப அங்க வைக்க மறந்துட்டேன்

செங்காந்தள்
மனித வாஷிங் மெஷினை அறிமுகம் செய்த ஜப்பான் நிறுவனம்
இங்கே ஏற்கனவே ஊழல் செய்பவர்களை புனிதராக்கும் இயந்திரமே வந்தாச்சு.

ArulrajArun
“விஜய்க்கு அரசியல் அறிவு தேவை” – அண்ணாமல
ஏன் அவரும் அரசியல additional course அமெரிக்காவுல போய் படிச்சிட்டு வரணுமா …
ச ப் பா ணி
ஓர் எல்லைக்கு மேல் கேள்வி கேட்டால் அறிவியல்
கேள்வி கேட்காமல் நம்ப வேண்டியிருந்தால் ஆன்மிகம்

தமிழ்????
உன்கிட்ட கேக்குறது ஒன்னே ஒன்னு தான்,
2024 எவ்வளோ பரவால்லனு மட்டும் சொல்ல வச்சிராத…
-2025
Mannar & company™????
வேதாளம் தானே முருங்கை மரம் ஏறிடிச்சின்னு சொல்லுவாங்க
நீங்க என்ன ’விலைவாசி முருங்கை மரம் ஏறிடிச்சி’னு சொல்றீங்க?!
முருங்கைக்காய் கிலோ ரூ.400 வரை விற்பனையாம் அதனால்தான் அப்படி சொன்னேன்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!