இதெல்லாம் வெளியில சொன்னா சிரிச்சிருவாங்க… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலையில அப்பா போன்‌ பண்ணி, “டேய்… நாளையில இருந்து ரேஷன் கடையில ரெண்டாயிரம் ரூபாய்க்கு டோக்கன் கொடுக்குறாங்களாம். காலையிலேயே போய் ஒழுங்கா வாங்கிட்டு வந்துருன்னு” சொன்னாரு.
“எந்த ரெண்டாயிரம் ரூபா, எதுக்கு கொடுக்குறாங்கன்னு” கேட்டேன்.
“அதான் பொங்கல் வருதுல்ல, அதுக்கு தான் கொடுக்குறாங்கன்னு” சொன்னாரு.
“அது வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்குறாங்க பா. நீ எதுல பார்த்தனு” கேட்டேன்.
“டிவியில இப்ப தான் ‘நாளை முதல் ரெண்டாயிரம் ரூபா டோக்கன் விநியோகம்னு’ தலைப்பு செய்தியில போட்டான்னு” சொன்னாரு.
“காரு, பைக், மனுஷங்கள்ளாம் தண்ணியில மிதக்குற மாதிரி அதே செய்தியில வீடியோ போட்டாங்களே… அதெல்லாம் பார்த்தியான்னு” கேட்டேன்.
“இல்ல நான் தலைப்பு மட்டும் தான் பார்த்தேன்னு” சொன்னாரு.
“நல்ல ஆளப்பா நீன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…


நெல்லை அண்ணாச்சி
அரசனை நம்பி
புருசனை கைவிட்ட கதை…!!!
விஜய் ” அரசியல் “…!!

Mannar & company™????
இன்னிக்கு இதை கிழிச்சேன்னு சொல்ற வாய்ப்பை கூட
“மாதக் காலண்டர்கள்” தருவதில்லை!!
-காலண்டர்_ட்வீட்கள்

ச ப் பா ணி
பணம் இருந்தாதான் நாலு பேர் மதிப்பாங்க என்பது
ஏ.டி.எம் க்கும் பொருந்தும்

SANKARRAMANI
“தலைவா, இங்க ஒரே மழை வெள்ளமா இருக்கு தலைவா?”
“எதுவா இருந்தாலும் பனையூருக்கு வா பேசிக்கலாம்.”

ச ப் பா ணி
என்னடா பெரிய பணம் என்பது மாதத் துவக்கம்
எங்கடா பணம் என்பது மாதக்கடைசி

mohanram.ko
‘ஏர்’ எடுத்துக்கூட பார்ப்பதில்லை, விவசாயிகள்

Sen Balan
2%, 5%இருக்கவரை தான் அது டேக்ஸ்.
28%, 35% அப்படின்னு போனா அது ஷேர்.

மயக்குநன்
பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஒருவேளை… பிட்காயினா கொடுப்பாங்களோ..?!

கோழியின் கிறுக்கல்!!
வீட்டிற்குள் இருக்கும் வண்டிகள் எல்லாம்,
ரோட்டிற்குள் வந்தால் அன்று முகூர்த்த நாள் என்றறிக!!


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!