இந்த ஆஃபர்லாம் நம்புற மாறியா இருக்கு? : அப்டேட் குமாரு

கடைசி ரெண்டு நாளா இந்த கோவைக்காரங்க புட் ஃபெஸ்டிவல் போனதும், அங்க கொடுத்த 800 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்காம தட்ட கையில வச்சுகிட்டு புலம்புனதும் சோசியல் மீடியால வைரலா போய்ட்டு இருக்கு…

இதெல்லாம் டீ மாஸ்டர் பாத்தாரோ என்னவோ தெரில, ’தம்பி இன்னைல இருந்து நம்ம கடைல ஒரு ஆஃபர் போயிட்டு இருக்கு. நூறுவா கொடுத்தீங்கன்னா, நூறு நாளைக்கு விதவிதமா டீ குடிக்கலாம்’னு சொன்னாரு…

’எதே… ஒரு ஸ்பூன் பாலுக்கு ஒரு டம்பளர் தண்ணி ஊத்தி தர உங்க கடையில இந்த ஆஃபர்லாம் நம்புற மாறியா இருக்கு’னு கேட்டுட்டு… அங்க இருந்து கெளம்பிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

butterfly
காற்றுதான் பலமாய் அடிக்கிறதே குடையை மடக்கினால் என்ன?
குடையை மடக்கிட்டா புயல்காத்து பலமா அடிக்குதுங்கிறதை மக்களுக்கு உணர்த்துறது எப்புடிங்க?

நெல்லை அண்ணாச்சி
2014 முதல் 2018 வரை நான்கு ஆண்டுகளில் ” 19 நாட்கள் ” மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை…
இதுவே…பெருசு போவியா..!

ச ப் பா ணி
ஃபெங்கல் புயலிலும்
வரும் திங்கள் நீ
அடேய்

Sasikumar J
லாப நோக்கத்திற்காக ஊழியர்களுக்கு சட்டவிரோத விசா! Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்.. USA அதிரடி!
238 கோடி அபராதம் கட்றதுக்கு தான் வாரம் 70 மணி நேரம் வேலை பார்த்து இருப்பாரோ….!

தர்மஅடி தர்மலிங்கம்
“தமிழகத்தில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை” – ஆர்.பி.உதயகுமார்!

அப்போ… அதிமுகவுக்கு மட்டும் தமிழகத்தில் செல்வாக்கு இருக்கோ..?!

????????????????????????????
எதிர்பார்ப்புகள் முடியும் இடத்தில் நிம்மதி தொடங்கும்!

mohanram.ko
பாஸ்… புயல் கூட போயிடிச்சி… இவிங்க மட்டும் இன்னும் கிழிஞ்ச குடையோட இங்கேயே சுத்திக்கிட்டு இருக்காங்க

மயக்குநன்
நான் 39 வருடங்களாக அரசியல் பயணத்தில் இருக்கிறேன்!- சசிகலா.
4 வருட பெங்களூரு பயணமும் அதில் வரும்ங்களா..?!

Sasikumar J
வீட்டுக்கு வந்துட்டு போன விருந்தாளி உடனே சாவியை மறந்துட்டேன்னு திருப்பி வர மாதிரி இந்த திங்கட்கிழமை திரும்ப வருது…!

கோழியின் கிறுக்கல்!!
யாரோ வானத்துல உட்காரந்துகிட்டு, குழாயை திறந்து விடுற மாதிரி மழை ஊத்துது!!

ச ப் பா ணி
ஒரு பொய் சொல்ல வார்த்தைகள் மட்டும் போதும்.
அதை அலுவலகத்தில் நம்ப வைக்க ppt தேவை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன?

வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts