இத இப்பதான் செய்யனுமா? : அப்டேட் குமாரு

டிரெண்டிங்
இன்னைக்கு ஃபெஞ்சல் புயல் வேகமா வந்துட்டு இருக்குன்னு வானிலை மையத்துல தகவல் சொன்னாங்க… அதுமாறியே சென்னைல லைட்டா குளிரும், வெயிட்டா மழையும் பெஞ்சிட்டு இருந்துச்சி…
சரி இந்த க்ளைமெட்டுக்கு ஒரு டீய போடுவோம்னு டீக்கடைக்கு போனா, மழையில் ஒருத்தன் அப்போ தான் நடுரோட்டுல பைக்க நிப்பாட்டி கழுவிக்கிட்டு இருந்தான், இன்னொருத்தன் புதுசா கட்டிட்டி இருக்குற பில்டிங் மேல இருந்து தண்ணிய ஊத்தி நனெச்சிட்டு இருந்தான்.. தூரமா ஒருத்தன் செடிக்கு தண்ணிய விட்டுட்டு இருந்தான்.
இதெல்லாம் பாத்து கடுப்பாகி டீக்கடைக்கு போனா, அங்க பாலுக்கு பதிலா வெந்நிய அதிகமா ஊத்தி மாஸ்டர் டீ போட்டு குடுத்தாரு பாருங்க… முடியல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
அறிவுரை டானிக் மாதிரி இருக்கனும். இன்ஜெக்‌ஷன் மாதிரி அல்ல

நெல்லை அண்ணாச்சி
3 வது திருமணம் செய்த
சாமியாரிணி அன்னபூரணி….
# நமக்கு எதற்கு வம்பு….
சுவாமி நித்தியானந்தா…!!!

Sasikumar J
கஷ்டதுல சிரிக்க சொன்னது அது உன்னோட கஷ்டத்தில;
அடுத்தவன் கஷ்டத்தில இல்ல…!

டீ இன்னும் வரலை
சில நேரங்களில் ரெண்டு வார்த்தை
மட்டும் தான் பேசனும்

இன்னும் சில இடங்களில் ‘சரி’ ன்னு
ரெண்டு எழுத்தோட நிறுத்துறது நல்லது..

Sasikumar J
~ ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிருச்சு மாமா…!

~ என்ன மாதமா…

~ இல்ல வருஷம்…


வெண்பா
இது மழை காலம் மாதிரியே இல்ல..

ஏன் உங்க மாவட்ட ஸ்கூலுக்கு லீவு விடலியா

எது..ஆமா!

கோழியின் கிறுக்கல்!!

நீங்கள் சொல்வதை எல்லாம் மனைவி எந்த எதிர் கேள்வியும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றால்,

‘ஃபோன் ஒயர் பிய்த்து ரொம்ப நாள் ஆச்சு’ என்றறிக!!

balebalu
FenjalCyclone நவ்:
இனிமேலும் நாளு கடத்தினா மரியாதையே போயிடும்
புயலாவே அடிச்சு கெத்தா இருப்போம்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அடிக்கடி ரிப்பேர்… கடுப்பாகி கடை முன்பே எலக்ட்ரிக் பைக்கை கொளுத்திய இளைஞர்!

ஃபெஞ்சல் புயல் எதிரொலி : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

+1
2
+1
24
+1
1
+1
4
+1
1
+1
5
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *