இன்னைக்கு கொஞ்சம் வேல அதிகமா இருந்ததால டீக்கட பக்கம் போகல. சரி நண்பன்ட்ட சொல்லிருவோமேனு போன் பண்ணி ‘டீ குடிக்க நா வரலடா’னு சொன்னேன்.
அதுக்கு அவன், ‘போடா ஃபெங்கல்’னு புசுக்குன்னு திட்டிட்டான்.
’என்னயா.. இப்டி திட்டுற’னு கேட்டா… ’ஆமா வங்கக் கடல்ல உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ’ஃபெங்கல்’னு ஒரு புயலா உருவாகும்னு 2 நாளைக்கு முன்னாடி சொன்னாங்க… நேத்து வர லேட்டாகுதுனு சொன்னாங்க… இன்னைக்கு புயலே வரலனு சொல்லிட்டாங்க…
அதே மாதிரி நீ வாரேனு சொன்ன, அதுக்கு அப்புறம் கொஞ்சம் லேட்டாகும்னு சொன்ன… இப்போ வரலனு சொல்ற… அதான் உன்ன ஃபெங்கல்’னு சொன்னேனு சொல்றான்…
எப்படி இப்படிலா யோசிக்கிறாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
balebalu
“எந்த பக்கம் போவது” என்ற குழப்பம்
மதில் மேல் இருக்கும் பூனைக்கு
மட்டும் அல்ல
கடலில் இருக்கும் புயலுக்கும் தான்
ச ப் பா ணி
சேர்த்து வைத்த கடன் நீ எனக்கு,
செலுத்த வேண்டிய E.M.I நானுனக்கு..
Sasikumar J
உனக்காக காத்து கிடக்கிறேன் எப்போது வருவாய்….!
~ புயல்
ArulrajArun
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது மாதிரி இந்த ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுறவன் perfect ha இருப்பான்னு அவனை ட்ராபிக் போலீஸ் கண்டுக்காம விடுறதும்…
நெல்லை அண்ணாச்சி
அதானியை கைவிடுங்க…. மணிப்பூர் போங்க…that is all
problem… solved…!!
# பாராளுமன்ற அமளி
ரஹீம் கஸ்ஸாலி
ஃபெங்கல் புயல் உருவாக சற்று தாமதமாகும் என்று படித்தேன். பெண்கள் மட்டுமல்ல, ஃபெங்கலும் ரெடியாக சற்று தாமதம்தான் ஆகும்போல
ச ப் பா ணி
“நாள்களை எண்ணாதே! எண்ணிப் பார்க்கும்படியாக உன் நாள்களை ஆக்கு”
#டேய்.. நானே ஒன்னாம் தேதி எப்ப வரும்னு நினைச்சிற மாச சம்பளகாரண்டா
mohanram.ko
கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பு நடக்கும் போதே தெரியும், நீங்க விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் இயக்கம்னு…
கோழியின் கிறுக்கல்!!
அண்ணன் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வதில்,
தங்கை ஓர் சிறந்த போலிஸ் அதிகாரி!!
Sasikumar J
புயலாய் அவள் எங்கோ
மையம் கொண்டிருக்க
அவள் நினைவுகள் மட்டும்
சூறாவளியாக இங்கே
வீசிக்கொண்டிருக்கிறது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
வயநாடு வெற்றி : கேரள பெண்ணாகவே மாறிய பிரியங்கா
“5 பேரும் ஒன்னாவே இருப்பாங்க… ஒன்னாவே போய்ட்டாங்க”: விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர்!