நாலு மாசத்துக்கு முன்னாடி டீக்கடைல ஒரு நண்பர் அறிமுகமானாரு.. வயசு 30 இருக்கும். ஒருநாள் டீக்குடிச்சிக்கிட்டே ‘ம்ஹூம் வயசாகிட்டே போகுது ப்ரோ… ஆனா பாருங்க வீட்லயும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்க. எழவு லவ்வும் செட் ஆக மாட்டேங்குதுனு ரொம்ப பீல் பண்ணாரு…
அவருக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு… இன்னைக்கு சாயங்கலாம் எதேச்சையா அவர டீக்கடைல மீட் பண்ணும் போது ரொம்ப சோகமா இருந்தாரு…
என்னாச்சு ப்ரோனு கேட்டா, ‘தல கல்யாணம் மட்டும் பண்ணிடாத… பொண்டாட்டி தொல்ல தாங்க முடில’னு ரொம்ப வருத்தமா சொல்லிட்டு கெளம்பிட்டாரு…
அந்த நேரம் பாத்து ரேடியோல, ’மாட்டிக்குனாரு ஒருத்தரு… அவர காப்பத்தனும் கருத்தரு’னு பாட்டு ஓடுது…
நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க
ArulrajArun
என்னைக்கு ரெட் alert yellow alert கொடுத்து மழை பெய்யும் ன்னு லீவு விடுறாங்கலோ அன்றைக்கு தான் மழையே வராது என்பது எழுதப்படாத விதி.
கடைநிலை ஊழியன்
இந்த ஒரு மழைக்கே, raincoat, muffler போடுற நமக்கு Ladakh, Himalaya’s bike ட்ரிப் ஆசை எல்லாம் தேவையா.. ?
நெல்லை அண்ணாச்சி
வானிலை அறிக்கையை
மாற்றும் ” சக்தி “….
# பள்ளிக்கூட விடுமுறை
mohanram.ko
நெட்ப்ளிக்ஸ்னா…. கல்யாண ஆல்பம் வாங்கி போடறவங்க தானே…
Sasikumar J
~ மழை பெஞ்சா நான் ஏன் ஆபீஸ் போக போறேன்…
~ ஏன் லீவு போட்டுவிடுவியா…
~இல்ல WFH எடுத்துடுவேன்…
~ரெண்டும் ஒன்னுதானடா…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பஜ்ஜி டீ சாப்பிடனும் போல இருக்குன்னு நினைக்கறதுக்கும், யாராச்சும் பிரெட் பாக்கெட் போட மாட்டாங்களான்னு கேட்கறதுக்கும் உள்ள வித்தியாசம் தான் மழையின் அளவு.
ச ப் பா ணி
இந்த வருஷம் போனஸ் வாங்கிட்டு கம்பெனி மாறினால் 90’s கிட்ஸ்
இந்த மாசம் சம்பளம் வாங்கிட்டு கம்பெனி மாறினால் 2k கிட்ஸ்
mohanram.ko
சீக்கிரமாகவே வந்துடுச்சி மாமா…
சம்பளமா… மாப்ள
சம்பளமா? மழை மாமா, டிசம்பர்ல வர வேண்டியது நவம்பர்லயே வந்துடுச்சி
கோழியின் கிறுக்கல்!!
வாழ்க்கையில் பிரச்சனைகள் என்னவோ FB status மாதிரி காலத்துக்கும் நிக்குது,
ஆனா மகிழ்ச்சியோ WhatsApp status மாதிரி ஒரே நாளில் மறைஞ்சுடுது!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
தேவநாதன் வழக்கு… விரைவில் ED விசாரணை : நீதிமன்றம் உத்தரவு!
”மோடியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” : ஏக்நாத் ஷிண்டே பேச்சால் கட்சிக்குள் அதிருப்தி!