இன்னைக்கு டீக்கடைக்கு போனதும், உக்கார கூட இடம் இல்ல… அவ்ளோ கூட்டமானு நெனச்சா அது உங்க தப்பு…
பெஞ்ச மழையில டீக்கட முன்னாடி போட்டிருந்த பெஞ்செல்லாம் நெனஞ்சதால… டீக்குடிக்க வர்ற கூட்டம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சி.
சரி வந்ததுக்கு ஒரு டீய போட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது பாக்குறேன்… ஒரு கடையில மட்டும் கூட்டம் அள்ளுது. அது என்ன கடைனு நா சொல்லவா செய்யனும்.. மழை அடிச்சாலும், வெயில் அடிச்சாலும் அங்க மட்டும் எப்பவும் காசு அள்ளுது..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
புதிய இந்தியா பொறக்குதோ இல்லையோ
வருஷா வருஷம் நவம்பர் , டிசம்பர் ல
புது புது புயலா பொறக்குது ????
-FengalCyclone
வசந்த்
“பேருந்துகளில் புகார்கள் இருந்தால் உடனே தெரியப்படுத்துக” – செய்தி
கிளாம்பாக்கத்துல பேருந்தே இல்ல போவியா..
ச ப் பா ணி
ஒரு நாளைக்கு பத்து phone call செய்றாங்க மாமா
Wife ஆ மாப்ள
இல்ல மாமா
suspected spam லிருந்து
balebalu
நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமை நெட்பிளக்ஸ் ரூ .50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்
புது மண ஜோடிகள் நவ் :
ஐயா நெட்ப்ளிக்ஸ்
உனக்கு ஸ்பெஷலா பத்திரிக்கை வைக்குறோம்
அட்லீஸ்ட் ஒரு கோடியாவது தர முடியுமா?
mohanram.ko
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லைன்னு சொல்லும் போது, எங்களை நினைச்சி பாவமா இல்லையா?
இருந்துச்சு
எப்போ
இதுக்காக நீங்க பாராட்டு விழா நடத்தும் போது…
Sasikumar J
~ மழைக்கு நல்ல இதமா…
~ டீ குடிக்கணும் போல இருக்கா…
~ இல்ல பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு…!
நெல்லை அண்ணாச்சி
அதானி பற்றி விவாதம்
நடத்தக்கோரிய எதிர்க்கட்சிகள்…!!!
# நடக்குற காரியத்தை கேளுங்க…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்