memes trolls update kumaru17

தீபாவளி புது டிரெஸும்… ஆன்லைன் ஆர்டரும்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

தீபாவளி நெருங்கிடுச்சு… எல்லாம் டிரெஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க…. நடுவுலேயே ப்ளிப்கார்ட், அமேசான்லலாம் ஆஃபரும் போய்கிட்டு இருக்கு…

சரி என்ன ஆஃபர்லாம் இருக்குனு போன்ல பாத்துட்டு இருந்தப்ப, பக்கதுல உட்காந்துருந்த தோழிக்கு போன் வந்துச்சு, எதிர் அழைப்புல பேசுனவங்க, “எப்ப தீபாவளிக்கு துணி எடுக்க போலாம்னு” கேட்டுருக்காங்க…

அதுக்கு இவ,  “என்னது கடைக்கு போய் துணி எடுக்குறியா… ஆன்லைன்ல ஆர்டர் போடு, டிரஸ் கிடைச்சதும் தீபாவளிக்கு போடு, தீபாவளி முடிஞ்சதும் ரிட்டன் போடு. தீபாவளிக்கு டிரஸ் எடுத்த மாதிரியும் இருக்கும், புது ட்ரெஸ் போட்ட மாதிரி இருக்கும்… பணமும் மிச்சமாகுங்றா”

நீங்களாம் நல்லா வருவீங்கனு சொல்லிட்டு,  நான் ஆன்லைன்ல டிரஸ் ஆர்டர் பன்னிட்டன்,

நீங்க அப்டேட் பாருங்க…

Kirachand
நமக்கு தெரியாததை தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளும் புத்திசாலித்தனம், முட்டாள்தனமே!

நெல்லை அண்ணாச்சி
“கொடிமரம்” விவகாரத்துக்கே ஆய்வுக்குழு போட்டது
நம்ம கம்பெனி் தான் அண்ணே..!!

ச ப் பா ணி

இறுதியில் கேட்கும் Any questions? என்பது மீட்டிங் முடிச்சுக்கலாம் என்பதற்கான National Anthem

 

கடைநிலை ஊழியன்
ஆயுத பூஜை அன்னைக்கு காலைல என்ன பண்ணனும்..
எல்லாதையும் கிளின் பண்ணனுமா.. ?
அதான் இல்ல.. return ticket போடனும்..

தர்மஅடி தர்மலிங்கம்
தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை..” – துரை வைகோ!
அது நமக்கு அநாவசியம்… ஸ்ட்ரைட்டா பதவிக்கு வந்திடனும்..

mohanram.ko
4 நாள் நமக்கு லீவு விட்டா போதாது.. நம்ம ஃபோனுக்கு லீவு விடணும்…
எத்தனை கால் பண்ணுவீங்க ஆபிஸ்ல இருந்து..

தர்மஅடி தர்மலிங்கம்
காங்கிரஸ் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது! – அகிலேஷ் யாதவ் கொந்தளிப்பு
அவங்க அவங்களுக்குள்ளேயே துரோகம் செஞ்சுக்குவாங்க, அப்படி இருக்க இதுக்கு போய் கொந்தளிச்சா எப்படி..?!

மயக்குநன்
தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி 25 சதவீதம் உயர்ந்துள்ளது!- மத்திய அமைச்சர் எல்.முருகன்.
இந்த விஷயம் சீமானுக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க பாஸ்..!

memes trolls update kumaru17

சரவணன். 𝓜
“மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… சாதி தலைவராக மாற்றி இருப்பார்கள்!” – ஆர்.என்.ரவி
Meanwhile அம்பேத்கர் ~ அடேய்.. நான் நார்த் இன்டியாவுல தான்டா பொறந்தேன்..

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கோழியின் கிறுக்கல்!!
Network Recharge பண்ணலைனா திரும்ப திரும்ப கூப்பிட்டு Torture பண்ற மாதிரி,
Signal ஒழுங்கா எடுக்கலைனா நாம திரும்ப திரும்ப கூப்பிட்டு கேட்கிற மாதிரி ஒரு System கொண்டு வரணும்!!

memes trolls update kumaru17

Vinayaga Murugan
முன்னெல்லாம் நானும் ஜீவகாருண்யம் பார்ப்பேன். தெருமுக்குல ஏழெட்டு தெருநாய்ங்க இருக்கதுங்க. அதுல ஒரு க்ரூப் எனக்கு தெரிஞ்ச நாய்ங்க. ஒண்ணும் செய்யாது. இன்னொரு க்ரூப் பக்கத்து ஏரியாவுல வந்து டென்ட் போட்டு ஏரியாவுக்குள்ள எவன் வந்தாலும் கடிக்க வரும். ஒருநாள் பார்ல இருந்து திரும்பி வீட்டுக்கு வர்றப்ப கடிக்க வந்துச்சுங்க. ஒரு செங்கலை எடுத்து மண்டைல போட்டேன். அன்னைல இருந்து நம்ம பக்கமே வர்றதில்லை. நான் தெருவுக்குள்ள வந்தாலே என்னை பார்த்துட்டு இவன் மோசமான ஆளுன்னு கம்முன்னு போயிடும். இன்னொரு பெரிய செங்கல் எடுத்து வச்சிருக்கேன். இந்த விலங்குநல ஆர்வலர் எவனாச்சும் வந்தா அவன் மண்டைல போட

memes trolls update kumaru17

லாக் ஆஃப்

கமல் ரசிகராக சந்தானத்தின் “பில்டப்”: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

நிர்மலா, யோகி  வரை செல்வாக்கு… கௌதமியை ஏமாற்றிய ஆல் இன் ஆல் அழகப்பன் பின்னணி!

நாளை முதல் தளபதி 68 அப்டேட்ஸ்!

 

+1
1
+1
7
+1
2
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *