எல்.ஐ.சி கம்பனிக்கே பாலிசி… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு வழக்கம் போல  ஃப்ரண்டோட டீ கடைக்கு போயிருந்தேன்.

அப்போ அதானி விவகாரத்த பத்தி நண்பர் பேச ஆரம்பிச்சாரு…

அதானி மீதான அமெரிக்கவின் குற்றச்சாட்டை அடுத்து எல்.ஐ.சி.க்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ருச்சுனு நண்பர் சொன்னாரு…

அது கூட வந்த இன்னொருத்தரு… எல்.ஐ.சி.ய காப்பாத்தவே பாலிசி போடனும் போலயேனு சொல்றாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
உள்ளூருக்கு யானை
அயலூருக்கு பூனை
#AdaniBribe

Mannar & company™????
ஜெயலலிதாம்மாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் 1,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்”
– திண்டுக்கல் சீனிவாசன்
அப்படினா நீங்க ஆயிரத்தில் ஒருவரா தலைவரே..?!

நெல்லை அண்ணாச்சி
எங்க அண்ணன் சிங்கம்
மேலே கை… வை பாப்போம்..!!
# அதானிக்கு அமெரிக்காவில்
” பிடி வாரண்ட் ”

ச ப் பா ணி
கல்யாண மண்டபத்தில்
தம்பி : ” கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும்..!!”
டேய் நான் வந்ததே அதுக்குதாண்டா

உள்ளூராட்டக்காரன்
பெண்கள்னு புயலுக்கு பேர் வச்சிருக்காங்க
அப்ப தொல்லை குடுக்காம போகாது
#FengalCyclone

ச ப் பா ணி
கணக்கு பார்க்காம செலவு செய்தா ஒன்னாம் தேதி
செலவு செய்ததை கணக்கு பார்த்தா முப்பத்தி ஒன்னாம் தேதி

????????????????????????????
மானம் கெட்ட அன்பு என்பது, மன்னித்து கொண்டே இருத்தல்!

செங்காந்தள்
நாட்டுப் பற்றைப் பேசிக் கொண்டு, நோட்டுப் பற்றை‌ மறைப்போம்…!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அம்மாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் 1,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்”
– திண்டுக்கல் சீனிவாசன்
# அப்படினா அம்மாவுக்கு எப்படி ஆயிரம் கோடி சொத்து சேர்ந்துச்சு..?
அய்யய்யோ.. அதை கேட்பாங்கன்னு யோசிக்க மறந்துட்டனே.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

ரூ.6,219 கோடி… அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

டிஜிட்டல் திண்ணை: அதானி லஞ்சம் கொடுத்தது யார் யாருக்கு?  அமெரிக்கா கையில் முழு பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment