இன்னைக்கு டீக்கடைக்கு போனா அங்க இருந்தவங்க எல்லாரும் நயன்தாரா கல்யாண வீடியோ பத்தியே பேசிட்டு இருந்தாங்க… பக்கத்துலேயே இரண்டு பேரு மத்தவங்க பேசுறத முறச்சு கேட்டுகிட்டு இருந்தாங்க… தனுஷ் ஃபேன்ஸ் போல.
அதுலயும் ஒருத்தன் சொன்னத நெனச்சா… இப்பவும் சிரிப்பு வருது… நயன் தாரா கல்யாண வீடியோ 25 கோடிக்கு வியாபாரம் ஆயிருக்குனு கேள்விப்பட்டுட்டு அவர் வீட்டுக்காரம்மா… ”ஏங்க இந்தாங்க நம்ம வீடியோவும் இந்த பென் டிரைவ்ல இருக்கு… இத எந்த யூடியூப் சேனலயாவது பப்ளிஷ் பண்ண சொல்லி காசு வாங்கிட்டு வாங்க”னு அனுப்பிருக்கு.
’எனக்கு வந்த கஷ்டம் என்னோட போகட்டும்னும் அத அப்படியே கூவத்துல எறிஞ்சிட்டு வந்துட்டேன்’னு சொன்னாரு பாருங்க…
அத கேட்டு அங்க இருந்த தனுஷ் பேன்ஸ் கூட சிரிச்சிட்டாங்க….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
மயக்குநன்
என்னோட ஓட்டுதான் பாஜகவுக்கு தேவை, பாஜக ஓட்டு எனக்கு தேவையில்லை!- எஸ்.வி.சேகர்.
கொஞ்ச நாளாவே ஓட்டு ஓட்டுனு பாஜகவை ஓட்டிக்கிட்டுதான் இருக்கீங்க பாஸ்..!
balebalu
கல்யாணத்துக்கு காசு செலவு பண்ண காலம் போய் இப்போ
கல்யாணத்தையே காசு பண்ணுறாங்க
நெல்லை அண்ணாச்சி
பிரதமர் மோடி மணிப்பூருக்கு
சென்று அமைதியை ஏற்படுத்த வேண்டும்..
..ராகுல்காந்தி
# நான் கேட்டேனா.?..மோடிஜி
ச ப் பா ணி
சமயத்தில் “அடி” (கணக்கு) உதவுவது போல், அளக்கிற டேப் கூட உதவாது
mohanram.ko
ஜோ – மறந்ததை ஞாபகப்படுத்தினா தப்பா?
தப்பில்லையே, எதை ஞாபகப்படுத்தின?
ஜோ – கங்குவாவை…
ச ப் பா ணி
சமயத்தில் “அடி” (கணக்கு) உதவுவது போல், அளக்கிற டேப் கூட உதவாது
படிக்காதவன்™
இங்கு நல்லவன் கெட்டவன்’ங்கிறதெல்லாம்
பணம் மட்டுமல்ல
3 செகண்ட் வீடியோ கூட சமயத்தில் தீர்மானிக்கும்…
mohanram.ko
6 நாள் வேலையை, 5 நாள் செய்தா போதும்னு சொன்னதுக்கு எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. நீ மட்டும் ஏன்ப்பா சோகமா இருக்க
அந்த 2 நாளும் வீட்டு வேலையை செய்யணும்ங்க
மயக்குநன்
விஜய் கட்சியில் இணைந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல!- சீமான்.
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே… அவர் கட்சியில் இணைஞ்ச பிறகு அவங்க எப்படி நாம் தமிழர் கட்சியினரா இருக்க முடியும்..?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பேராசிரியர்கள் மறுநியமனத்தை நீட்டித்து உத்தரவு!
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி! – வன அலுவலர் கூறியது என்ன?