இன்னைக்கு நண்பர் ஒருத்தர் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
“ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகியிருக்கா? என் பொண்டாட்டி வேற படத்துக்கு கூட்டிட்டு போன்னு டார்ச்சர் பண்றான்னு” சொன்னாப்ல.
“யோவ், கங்குவா படம் ரிலீஸ் ஆகியிருக்கு. குடும்பத்தோட கூட்டிட்டு போன்னு” சொன்னேன்.
“சும்மாவே என் பொண்டாட்டி பொங்குவா… அந்த படத்துக்கு கூட்டிட்டு போனா பொங்கோ பொங்குன்னு பொங்கிருவான்னு” சொன்னாப்ல.
அவரோட சிட்டிவேஷன புரிஞ்சிக்கிட்டு “சரி நண்பா வீட்லயே நல்ல சீரியலா பாருங்கன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
கடையில் சில்லறை இல்லைனு சாக்லெட் வாங்குவதற்கு பதிலாக ஷேம்பு வாங்குபவனுக்குள் ஆயிரம் பொருளாதார அறிஞன் இருக்கிறான்.
Dr. M. A. N. Loganathan
நம்ம கட்சில இருந்து வெலகி அந்தக் கட்சில சேர்ந்துட்டானுங்கன்னு பொய்யா நியூஸ் போடறானுங்கடா…
எப்டி தலைவரே இவ்வளவு உறுதியா சொல்லறீங்க
அத்தனை பேர் எப்படா நம்ம கட்சில இருந்தானுங்க
iQKUBAL
நீ நல்லாவே இருக்க மாட்ட-ன்னு சொல்றான் பாரு, அவன கூட நம்பு…
ஆனா, உன் நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்னு சொல்றான் பாரு, அவன மட்டும் நம்பாத…
கோழியின் கிறுக்கல்!!
கைப்பேசியில் சில எண்கள் அழைப்பதற்காக,
சில எண்கள் நினைவிற்காக!!
ச ப் பா ணி
‘வீட்டை விட்டு வெளிய போய்டு’ என்பதன் அப்டேட் வெர்சன் தான் ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்துடுவேன் என்பது.
பர்வீன் யூனுஸ்
எஸ்.வீ.சேகர் டிராமாவுக்கும் ‘கங்குவா’வுக்கும் என்ன வித்தியாசம்? #அது ‘காதுல பூ’ இது ‘காதுல பஞ்சு’
mohanram.ko
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
கங்குவா படம் பார்க்கறாயா?
iQKUBAL
இவன நான் பாத்து என் கம்பெனில இன்டர்வியூக்கு வரச்சொன்னேன் சாமி.
HR மேடம், Excel தெரியுமான்னு கேட்டதுக்கு, Surf எக்சலா? TVS எக்சலான்னு கேட்ருக்கான்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் – திருமா அரியலூர் கெமிஸ்ட்ரி! ஆட்சியில் பங்கு… பிராக்டிகல் பின்னணி!
சென்னை பீச் டூ தாம்பரம்… நவம்பர் 17-ல் ரயில் சேவையில் மாற்றம்!