இன்னைக்கு ஆபிஸ்ல நண்பர் ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
“வர்ற ஜனவரி மாசத்துல இருந்து ரேஷன் கார்டு வச்சிருக்குற எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்போறாங்களாம். செய்தி பார்த்தீங்களான்னு” கேட்டேன்.
“அட என்னங்க சொல்றீங்க.. அப்போம் எனக்கு மாசம் ஐயாயிரம் கிடைக்குமேன்னு” ஹேப்பியா சொன்னாப்ல.
உடனே இன்னொரு நண்பர், “ஒரு வீட்டுக்கு ஆயிரம் தான கொடுப்பாங்க. அதெப்டி இவருக்கு மட்டும் ஐயாயிரம் கிடைக்கும்னு” கேட்டாப்ள.
அதுக்கு நான், “யோவ், பல்லு இருக்குறவன் பக்கோட சாப்டுறான். இதுகூட தெரியலன்னா என்னயா நீன்னு” சொன்னேன்.
“ஓகே புரிஞ்சு போச்சு… கோட் வேர்டு அக்சப்டட்னு” சொன்னாப்ல
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ArulrajArun
வள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயற்சி: முதல்வர்
# சரியா தேர்தல் வருகிற கொஞ்ச காலத்திற்கு முன்னதாக தான் காவி சாயம் பூசுவாங்க சனாதன எதிர்ப்பு அதிகமாகும் வட மாநில ஆட்கள் தமிழகத்திற்கு வருவது அதிகமா கண்களுக்கு தெரியும் etc …
ச ப் பா ணி
நாம சரியாக இருந்தா நியாயமா பேசனும்
நம்ம சைடு தப்பு இருந்தா நியாயப்படுத்திப் பேசனும்
#பொதுவிதி
mohanram.ko
மீடியாக்கள் – மக்கள் எல்லாம் நிம்மதியா இருக்காங்க, எதாவது பிரேக்கிங் நியூஸ் போட்டு அவர்களை பயமுறுத்துவோம்
நெல்லை அண்ணாச்சி!
ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்க விஜய் முடிவு..# சொகுசு கார் வரி ஏய்ப்பு ஊழல் list ல வராதுங்களா…!!!
ச ப் பா ணி
கடந்தகாலம் என்பது சில நேரங்களில் இறந்தகாலம்
சில நேரங்களில் நீ இருந்த காலம்…
கோழியின் கிறுக்கல்!!
சிறு வயதில் படித்ததில் நியூட்டனின் மூன்றாம் விதி மட்டுமே,
வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கின்றது!!
செங்காந்தள்
அந்தக் காலத்தில் சாயப்பட்டறைகள் இல்லை. அதனாலதான் தேவதைகளுக்கு வெள்ளை உடை…!!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘சீக்கிரம் குணமாயிருவீங்க’… டாக்டர் பாலாஜியிடம் போன் பேசிய ஸ்டாலின்
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையா? – கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்!