இன்னைக்கு வழக்கம் போல நண்பரோட டீக்கடைக்கு போயிருந்தேன்…
அங்க டிவியில முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை”னு பேட்டி கொடுத்துக்கிட்டு இருந்தாரு….
இத பாத்துட்டு, என்ன நண்பா திமுகவை எதிர்க்கிற ஒத்த கருத்து உடைய கட்சியுடன் கூட்டணினு பொதுச்செயலாளர் எடப்பாடி சொல்றாரு…
ஜெயக்குமார் இப்படி சொல்றாரேனு கேட்டேன்.
இதுக்கு நம்ம நண்பரு, அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க… இவ்வளவு நாளா பிரேக்கப்ல இருந்தாங்க. இப்ப சேர போறாங்க. அதுக்கான ஆரம்பம் தான் இதுனு சொல்றாரு…
டீக்கடையை விவாத மேடையை ஆக்காதீங்கன்னு சொல்லிட்டு அவர அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
இப்பெல்லாம் குடுக்கிற தெய்வம் கால் பண்ணி
லோன் வேண்டுமானு கேட்கிறது
சரவணன். ????
மாட்டிக்கொள்ளாதவைகள் திறமை என்றும் மாட்டிக்கொள்பவைகள் திருட்டு என்றும் கூறப்படுகிறது
ஊர்க்காவலன்
விதவை இறந்த பின்பு அவளது புகைப்படம் சூடி கொண்டது பூவும் பொட்டும்..!
ArulrajArun
“பதிலுக்கு பதில்” பேசுபவர்களிடம் “சரியான பதிலை” எதிர்பார்க்க முடியாது – டாட்
ஊர்க்காவலன்
ஈர விறகுடன் போராடும் அம்மாவுடன்
“புகை”ப்படம் எடுத்துகொண்டது அடுப்பு..!
கோழியின் கிறுக்கல்!!
திருவள்ளுவரின் குறளை விட,
திருமதிகளின் குரலில்,
ஓங்கி நிற்கின்றது “அதிகாரம்”!!
ச ப் பா ணி
நாம சரியாக இருந்தா நியாயமா பேசனும்
நம்ம சைடு தப்பு இருந்தா நியாயப்படுத்திப் பேசனும்
#பொதுவிதி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
திருமண சர்ச்சை… சூரியனார் கோயில் மடத்திலிருந்து வெளியேறிய ஆதினம்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை!