இன்னைக்கு காலைல இருந்து ஒரே வேல மதியம் சாப்பிட கூட முடியல… சரி நைட்டு போயி ஒரு பிடி புடிக்கலனா வீட்டில ரசம் சோறு தான் வச்சிருந்தாங்க.
பசியில வேற வழி தெரியல… சரி தொட்டுக்கவாவது ஏதாவது செஞ்சு வச்சிருக்கியாம்மானு கேட்டா… தீபாவளி முறுக்கு இருக்குல அதை எடுத்து வச்சு சாப்பிடுனு சொல்றாங்க
தீபாவளி முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேல ஆட்சேனு கேட்டா….
பக்கத்து வீட்டுக்காரங்க… சொந்தக்காரங்க… கொடுத்ததுனு சொல்றாங்க …
இது என்னடா நமக்கு வந்த கொடுமைன்னு பசிக்கு இருக்கிறத சாப்பிட்டு தூங்கிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ArulrajArun
உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது – பிரதமர் மோடி
#அப்படியே உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை காப்பாற்ற முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே
ச ப் பா ணி
முரண்பட்ட கருத்தை டீல் செய்வது இரண்டு விதத்தில்
*கேள்விக்குறியதாக்குவது
*கேலிக்குறியதாக்குவது
கடைநிலை ஊழியன்
என்ன reason னுக்கு உனக்கு பிரியாணி பிடிச்சிருக்கு.. ?
பிடிச்சிருக்கு.. அதான் reason..
வெண்பா
பலவீனங்களுக்கு இடையேயான பலப்பரிட்சையில் just pass ஆகிறது தன்மானம்
ச ப் பா ணி
மிச்சம் வைக்க கூடாதது பகையையும்
“பழைய இட்லி மாவையும்”
H.Umar Farook
2016ல் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்த பலரும் இன்று மௌனமாக இருக்கிறார்களே !
# மௌன அஞ்சலியோ?!
Sasikumar J
IT ல வேலை பார்குறவங்களை ஃபயர்டு அப்படினா வேலை போய்டுச்சு அவ்வளவுதான், ஆனா மில்ட்டரில இருக்கவங்கள சொன்னா உயிரே போச்சு
படிக்காதவன்™
குளிக்கிற சோப்பு கரையிர வேகத்தில் கூட வாழ்க்கையில் முன்னேறலைனு நினைக்கும்போது
அந்த சோப்பே காரி துப்புன மாதிரி இருக்கு…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
விருதுநகரில் ரோடுஷோ நடத்திய ஸ்டாலின்
ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்!