வழக்கம்போல இன்னிக்கு நண்பனோட டீ கடைக்கு போனேன். அவனும் வழக்கம்போல மொபைலையே நோண்டிகிட்டு வந்தாரு…
இதுக்கு தனியாவே போயிருக்கலாம்னு நினைச்சிக்கிட்டு, டேய் எப்ப பாத்தாலும் போனையே யூஸ் பன்றியே, போன தவிர வேற உலகமே தெரியாதானு கேட்டேன்…
“அது எங்க இருக்கு லிங்க் அனுப்புங்கனு சொல்றான்”…
இவன வச்சிகிட்டு ஒன்னும் பன்ன முடியாதுனு அங்கிருந்து கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
எங்களிடம் 5 ஆண்டுகள் விட்டுப் பாருங்கள்; டோக்கியோவைப் போல் மாற்றிக் காட்டுகிறோம்” – அன்புமணி
#தமிழ்நாடுங்கிற பெயரை டோக்கியோனு மாத்திட்டா போதும்
Sai Sudhar
பசியை தள்ளி வைக்கும் குடல் நிவாரணி தேனீர்!
செங்காந்தள்
பண மதிப்பு இழப்பால் ரூபாய் நோட்டுகளின் நெற்றியில் ஒரு ரூபாய் காசு வைத்த நாள் நவம்பர் 8.
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
போகும் பாதையில் எதிரிகள் அதிகம் இருப்பின்
அது சரியான பாதை என்று அறிக!!
ArulrajArun
நெருப்பு உண்டாகும் நேரத்தில் நீர் குமிழி அதன் மேல் விழுந்தது போல தான் சிலரது வாழ்க்கை – குளிர் காலத்தில்
mohanram.ko
நீ யார அதிகமா நம்புறியோ, அவன் தான் உன் முதுகுல குத்துவான்
டேய், அவரு ஆர்தோ டாக்டர்டா
ச ப் பா ணி
பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையென்று ஏதுமில்லை..
அடேய் நான் பேசினதால தான் டா பிரச்சனையே
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் மரணம்!
ஆம்ஸ்டெர்டாமில் ரசிகர்கள் மீது தாக்குதல்… விமானத்தை கிளப்பிய இஸ்ரேல்