இன்னைக்கு நம்ம தம்பி ஒருத்தன ஆபிஸ் வர்ற வழியில பார்த்தேன்.
“என்னடா… இன்ஸ்டால பைக் வீலிங், பசங்கக்கூட ஜாலியா அலப்பறை பண்ணி ஸ்டேட்டஸ் போட்டு சும்மா கலக்குறியேன்னு” சொன்னேன்.
“நீ வேற போனா.. பிரேக் அப் ஆகிருச்சு… அதான் ஸ்டேட்டஸ் போட்டு மனச தேத்திக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“டேய் அதுக்கு சோகமா இருக்குற ஸ்டேட்ட்ஸ் தான போடனும்னு” கேட்டேன்.
“அண்ணே நா டுகே கிட்… த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு போய்க்கிட்டே இருப்பேன். அந்த பொண்ண நினைச்சிக்கிட்டு சரக்கு அடிக்கிறது. சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டுறதெல்லாம் நமக்கு செட் ஆகாதுனான்னு” சொன்னான்.
இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நான், “புதிய காதல் செட் ஆக வாழ்த்துக்கள்” சொல்லி அனுப்பி வச்சேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
இழுபறி வந்தா நம்ம ‘கூவத்தூர் ரிசார்ட்’ மாதிரி அங்க எதுவும் இருக்கா ன்னு கேக்குறாம்பா
#USElections2024
கடைநிலை ஊழியன்
பாஸ்.. ட்ரம்ப் முன்னிலை ங்க.. கமலா வரது கஷ்டம் தான்..
நமக்கு இருக்குற பிரச்சனைக்கு, உலக அரசியல் எல்லாம் தேவையா.. ?
கோழியின் கிறுக்கல்!!
US presidential election follow பண்ற அளவுக்கு ஒரு சொகுசான வாழ்க்கை அமைந்து விட்டால் போதும்!!
ச ப் பா ணி
திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்’ – அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
#அப்ப ஓ.பி எஸ் ஸை
mohanram.ko
டேய், ட்ரம்ப் ஜெயிச்சிட்டாருடா
டேய், அவரு ஜெயிச்சது அமெரிக்காவில்டா… நீ இருக்கிறது இந்தியாவுலடா
balebalu
அமெரிக்க அதிபர் தேர்தல்.. விண்வெளியிலிருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ் – செய்தி
இங்கல்லாம் உள்ளூரிலேயே ஒட்டு போட பஸ் , ட்ரெயின் பிடித்து சொந்த ஊர் போக வேண்டி இருக்கு
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு ஊழியர்கள் மீது ED வழக்கு தொடர முன் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டிஜிட்டல் திண்ணை: விஜய்க்கு அதிக சீட்டுகள்… விட்டுத்தர தயாராகும் எடப்பாடி