இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி! – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு ஆபிஸ்ல மதியம் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். நண்பர் ஒருத்தர் வந்தாப்ல…

“அமெரிக்கா எலெக்‌ஷன் பார்த்தீங்களா… இந்த தடவை டெஃபனட்டா கமலா தான் வருவாங்க. அமெரிக்காவோட களமே வேற. இதுவரை வந்த எலெக்‌ஷஸ் தொடர்பான எல்லா ஆர்ட்டிக்கள்ஸயும் படிச்சிட்டேன். உங்க ஒப்பீனியன் என்னன்னு” கேட்டாப்ல…

“நமக்கு அதைப் பத்திலாம் எதுவும் தெரியாதுன்னு” சொன்னேன்.

“ஓ மை காட்.. என்ன இதுகூட தெரியலைன்னான்னு” உச் கொட்டுனாப்ல…

“சரி… உங்க வார்டு கவுன்சிலர் யாருன்னு தெரியுமான்னு” அவருக்கிட்ட கேட்டேன்.

“ஒன் மினிட்… ஒன் மினிட்னு” சொல்லிட்டு கூகுள்ள சர்ச் பண்ணி சொன்னாப்ல.

“மொதல்ல உள்ளூர் அரசியல் தெரிஞ்சிக்கிட்டு, அப்புறம் உலக அரசியல் பேசலாம்னு” சொன்னேன்.

சைலான்ட்டாகிட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
ஈ பி எஸ் நவ் : நல்ல வேளை
இனிமே ‘சேக்கிழார் கம்பராமாயணத்தை’ கொஞ்சம் மறந்துட்டு
‘ராஜாஜி பொன்னியின் செல்வனுக்கு’ தாவிடுவாங்க
நாம தப்பிச்சோம்

BINDU
உண்மை என்றால்,
என்னவென்று தெரியாதவர்களிடம்,
உண்மையாக இருப்பதுதான் நம்முடைய முட்டாள் தனம்…

Sasikumar J
~ யார்கிட்டயும் ஸ்டேட்டஸ் பாக்குறது இல்ல…
~ அவ்வளவு நல்லவனா…
~ இல்ல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சொன்னேன்…

ரயில் கணேசன்
சில சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது பேச தெரியாமல் அல்ல,
தவறாக எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காகத்தான்..!

கோழியின் கிறுக்கல்!!
பண்டிகை முடிஞ்சு ஆபிஸ்ல ஒரு ரெண்டு மூணு நாளைக்கு எல்லார் கூடவும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட கூடாது,ஏன்னா அவங்க வீட்டு பலகாரத்தை சாப்பிட சொல்லி நம்ம மாட்டி விடுவாங்க!!

Sasikumar J
ஐஸ் வைக்கிறதுக்கும் ஐஸ்ல வைக்கிறதுக்கும் இடைப்பட்ட போராட்டம் தான் இந்த வாழ்க்கை…!

Aishu Swami
மனைவி சொல்வது தான் சரி !
ஆதாரம் – !
கணவன் : ” கூட்டுல உப்பு அதிகமா இருக்கு…”
மனைவி : “உப்பு சரியாதான் இருக்கு… காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க…..”
முடிவு – அப்ப மனைவி சொல்வது சரி !!!!
கணவன் – வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு,”
மனைவி – “இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்….???”
முடிவு – அப்ப மனைவி சொல்வதுதான் சரி !!!!
கணவன் : “3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!”
மனைவி “இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????”
கணவன் “நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா” 😁
முடிவு – அப்ப மனைவி சொல்வது மட்டும் தான் தான் சரி !!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

கோவையில் தங்க நகை தொழிற்பூங்கா… ஸ்டாலின் கொடுத்த நம்பிக்கை!

பெருகும் போதைக் கலாச்சாரம்… புதுச்சேரியில் சிதைக்கப்பட்ட சிறுமி…-கயவர்களை கைது செய்தது எப்படி?

+1
4
+1
17
+1
1
+1
5
+1
0
+1
5
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *