தீபாவளிக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சி இன்னைக்கு தான் ஆபிஸ் வந்து சேர்ந்தேன். ஆபிஸ்ல நம்ம நண்பர்கள் எல்லோரும், வீட்ல செஞ்ச முறுக்கு, அதிரசம், தட்டை, அச்சுமுறுக்குன்னு பழைய பலகாரத்த தூக்கிட்டு வந்தாட்டாங்க.
வீட்ல தான் பலகாரம் கொடுத்து சாகடிச்சாங்கன்னு பார்த்தா, இங்கேயும் சாகடிக்கிறாய்ங்க. அதனால உஷாராகி, யார் பலகாரம் கொண்டு வந்தாலும், “ரொம்ப தாங்ஸ்… நான் டயட்ல இருக்கேன்னு” சொல்லி எஸ்கேப் ஆகிட்டு வர்றேன். இன்னும் ஒரு வாரத்துக்கு இதை சொல்லி தான் தப்பிக்கணும்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
balebalu
To வங்க கடல் :
நவம்பர் ,டிசம்பர் வந்துட்டா போதுமே
உங்க ஆட்டம் பயங்கரமா இருக்குமே
mohanram.ko
எல்லோரும் சந்தோஷமா தீபாவளி டிரஸ் போட்டுகிட்டு ஆபிஸ் போயிட்டு வராங்க, நீ மட்டும் ஏன்ப்பா சோகமா இருக்க
நான், ஒர்க் ப்ரம் ஹோம் ங்க
ச ப் பா ணி
சின்ன டிவியே பார்த்துட்டு இருந்துட்டு..பெரிய டிவியில் படம் பார்ப்பது..
கண் புரை ஆப்ரேஷன் செய்தபின் உலகை பார்ப்பது போல
செங்காந்தள்
புத்தகங்களை வாங்கினால் மூலையில் போடாதீர்கள்,
மூளையில் போடுங்கள்…!!!
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பது கூட ஒரு வித நோய் தான்!!
கடைநிலை ஊழியன்
தீபாவளிக்கு மீந்துபோன பலகாரங்கள் தான், அடுத்த நான்கு நாட்களுக்கு lunch box ‘சில், snacks ‘சாக மாறுகிறது !!
ச ப் பா ணி
யார்ணே நீ..இன்னிக்கு போய் பட்டாசு வெடிச்சுட்டு இருக்க?
தீபாவளி அன்னிக்கு திருப்பதி போய்ட்டேன். பட்டாசு வீணாப்போய்டுமேனு இன்னிக்கு வெடிக்கிறேன்.
மயக்குநன்
எல்லா கட்சிகளும் ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன!- செல்வப்பெருந்தகை.
‘காமராஜர் ஆட்சி’யை முதல்வர் ஸ்டாலின் தந்துட்டு இருக்கிறதால… தமிழக காங்கிரஸுக்கு மட்டும் அந்த எண்ணமே வந்ததில்லைனு சொல்லுங்க..!
கடைநிலை ஊழியன்
என்ன ஒரே ஜாலி தான் போல..
நாலு நாள் லீவ் முடிஞ்சு யாரு ஆபீஸ்க்கு வந்தாலும், இதான் முதல்ல கேட்போம்..
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
லாக் ஆஃப்
தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்
போலீசாரிடம் அட்ராசிட்டி : போதை ஜோடிக்கு ஜாமீன் மறுப்பு!