தீபாவளி வந்தாலே நாக்குல பலகார சுவை ஆட்டோமெட்டிக்கா தித்திக்கும். இந்த வருஷம் தீபாவளிக்கு மாநாட்டுல விஜய் பேசுனதுனால பாயாசம் ஹாட் டாப்பிக்கா மாறியிருக்கு போல.
இது தெரியாமா நானும் வழக்கம்போல அந்த டிவி விவாத நிகழ்ச்சிய வச்சிட்டேன். திடீர்னு கிச்சன்ல வந்த என் மனைவி, ‘என்னங்க விஜய் பாயாசத்துக்கு டிப்ஸ் கொடுத்துருக்காரு போல… எல்லாரும் அத பத்தியே பேசிட்டு இருக்காங்க… கொஞ்சம் வாலியூம் ஏத்தி வைங்க… நான் கிச்சன்ல இருந்து கேட்டுக்குறேன்’னு சொல்லிட்டு போயிட்டாங்க…
இத கேட்டுட்டு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி… இனி ஒருவாரத்துக்கு அரசியல் டாபிக்கே வேணாம்னு சொல்லி கேபிள் ஒயர உருவி விட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
அதிரசம் , லட்டுடன் தீபாவளி ஆஃபரில் கூட்டணி போடுகிறது
” குலோப் ஜாமூன் ”
Sai Sudhar
youtube க்கு தீபாவளி வந்துருச்சு போல,
தொறந்தா ஒரே முறுக்கு செய்முறையா வருது…
Mannar & company™
என்ன விஜய் மாநாட்டில் மறைமுகமாக தாக்கி இருக்காரு..
கல்யாணம் ஆயிடுச்சா மாமியார் மறைமுக தாக்குதல் தெரியுமா!?
balebalu
இந்த தடவை தீபாவளிக்கு அதிகம் பேசப்படும் சுவீட்
” பாயாசம் ”
ArulrajArun
“அதிகமா பட்டாசு வாங்கி வெடிக்கணும்” – அண்ணாமலை வேண்டுகோள்!
காசு இல்லப்பா…
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
மனதில் தோன்றுவதை எல்லாம் வெளியே பேசுவோமானால்
ஒரு உறவு கூட மிஞ்சாது!!!
கடைநிலை ஊழியன்
in travel agency now –
அண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போகனும்.. நல்லா சென்டர் ல விண்டோ சீட் ‘டா ஒன்னு போடுணே..
பேசாம போயிரு.. அதான் உனக்கு நல்லது..
mohanram.ko
காலையில் 7 மணியில் இருந்து எல்லோரும் வெயில்லயே இருந்தாங்க..
அதை மட்டும் ஞாபகப்படுத்தாதீங்க தம்பி… நல்லவேளை நான் கேரவன்ல இருந்தேன்
கோழியின் கிறுக்கல்!!
இந்த jioகாரன்,
ஏன் எல்லா messageம் மேஜர் சுந்தரராஜன் மாதிரி தமிழ்ல ஒரு தடவை Englishல ஒரு தடவை அனுப்புறாங்க!?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
புதுச்சேரியில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
கேபினெட் மீட்டிங்கை பதுங்கி பதுங்கி நடத்திய இஸ்ரேல்… ஈரான் மீது இவ்வளவு அச்சமா?