இன்னைக்கு நம்ம திமுக நண்பர் ஒருத்தர் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
”உதயநிதி கலந்துக்கிட்ட அரசு நிகழ்ச்சியில, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது சில வார்த்தைகள தவறா பாடிட்டாங்களாமேன்னு” கேட்டேன்.
”அது ஒன்னும் இல்ல நண்பா… மைக்ல கோளாறு. அதான் ரெண்டாவது தடவ கரெக்டா பாடிட்டாங்களேன்னு” சொன்னாப்ல.
”ஆளுநர் நிகழ்ச்சியில தெரியாம பாடிட்டேன்னு சொன்னாங்க. சும்மா விட்டீங்களா. போட்டு அந்த அடி அடிச்சீங்க. உங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியான்னு” கேட்டேன்.
டென்ஷனாகி போனை வச்சிட்டாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
தமிழ் தெரியுதோ இல்லையோ தமிழ் தாய் வாழ்த்து தெரிஞ்சாதான்அரசு வேலை ன்னு இனி சட்டமே போட்டுடலாம்.
தப்பும் தவறுமா பாடுவதை விட பேப்பரில் எழுதி வைத்து கொண்டோ மொபைலில் பார்த்தோ பாடி இருக்கலாமே….
Mannar & company™
டெய்லர்கிட்ட துணிகளை தைக்க கொடுத்து இன்னும் எத்தனை நாள் இருக்குனு எண்ணிக்கிட்டு இருந்த வரைக்கும் பண்டிகைகள் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக இருந்துச்சு!
கடைநிலை ஊழியன்
எங்கடா கிளம்பிட்ட.. ?
மாநாட்டுக்கு பாஸ்..
அதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு டா..
இப்பவே போனா தான் பாஸ் முன்னாடி ரோ ‘ல இடம் கிடைக்கும்..
கோழியின் கிறுக்கல்!!
மற்ற நாடுகளில் எல்லாம் சாலையில் பயணிப்பவர்கள் நான்கு திசைகளில் பார்த்தால் போதும்,
நம்ம நாட்டில் மட்டும் ஈரெட்டு பதினாறு திசைகளிலும் பார்க்கணும்!!
Sasikumar J
செய்தி : 50 பைசாவை திருப்பித் தராத தபால் நிலையம்.. ₹15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!
பஸ்ல மீதி வாங்க வேண்டிய சில்லறை காசுகளுக்கெல்லாம் கேஸ் போட்டு இருந்தா இந்நேரம் பல கோடி வந்து இருக்கும் போலயே…!
Mannar & company™
வாழ்க்கைல நமக்காக யார் இருக்காங்கன்னு யோசிக்கிறதை விட்டுட்டு நம்மளை நம்பி யார் இருக்காங்கன்னு யோசனை பண்ணி பார்த்தேன்..
யார் இருக்கா?
யாரும் இல்ல, நாமதான் மொபைல் போனை நம்பி இருக்கோம்னு புரிஞ்சிது!
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
ஒரு பனை ஓலைக் குடிசை… உள்ளே நான்கைந்து சட்டி பானை…
வெளியே ஒரு விசுவாசமான நாய்…
பால் கறக்கும் ஒரு பசுமாடு….
இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்…
இரண்டு மண்வெட்டி…
பத்து ஆடுகள்….
ஒரு சேவல்…
ஐந்து கோழி… 30 குஞ்சுகள்.
இரண்டு ஏக்கர் நிலம்…. அதிலொரு கிணறு….
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்…
தென்னை மரத்தடியில்
ஒரு முருங்கை மரத்தோடு,
ஒரு கருவேப்பிலை மரமும்…
பக்கத்தில் பத்து வாழைமரம்…
அடுத்து ஒரு புளியமரம்…
பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்…
விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்…
மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்…
மீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும் சோளமும் கேழ்வரகும்… தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும். இவை மட்டுமே போதும்…
எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க…..
உலகின் ஆகச்சிறந்த
தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… உதயநிதி பதவி விலகுவாரா? – எல்.முருகன் காட்டம்!
பதிவு செய்யப்பட்ட கட்சியானது தவெக : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!