நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஒரு லைட் டீ, ஒரு ஸ்ட்ராங் டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தேன்.
நண்பர், “மறுபடியும் இந்த ஆளுநரும் முதல்வரும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாங்க போலயேன்னு” சொன்னாப்ல.
“ஆமா நண்பா… இப்போதாம் ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல ஒரு அன்டர்ஸ்டான்டிங் இருக்குது. புது காதலர்கள் போல இணக்கமா இருக்குறாங்கன்னு நம்ம செல்லூர் ராஜூ அண்ணன் சொன்னாரு. அவரு வாய் வச்ச மூகூர்த்தம்… மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாங்கன்னு” சொன்னேன்.
அதுக்கு நண்பர், “நல்ல வேலை. நம்ம செல்லூர் ராஜூக்கிட்ட இந்த சண்டையை பத்தி இன்னும் ரிப்போர்ட்டஸ் கேள்வி கேக்கல… ஒருவேளை கேட்ருந்தா, காதலர்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரத்தான் செய்யும். அதை அவங்களே பேசித் தீர்த்துருவாங்கன்னு எல்லோரையும் அசரடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லிருப்பாருன்னு” நண்பர் சொன்னாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
balebalu
இளமையில் மேக் அப் பெட்டி
முதுமையில் மாத்திரை பெட்டி
#பயணம்
Mannar & company™🕗
துணிக்கடைகளில் பெண்கள் அதிகம் கேட்பது..
இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?
இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா?
பெண்கள் டிசைன் அப்படி!
ச ப் பா ணி
சிறைபட்டிருக்கும் கண்களை
விடுதலை செய்வது
Battery low வாசகங்களே!
செங்காந்தள்
நாங்கள் பொருட்களுக்கான
வரிகளைக் குறைக்கச் சொல்லிக் கேட்டோம்.
நீங்கள் பொருள் உள்ள வரிகளைக் குறைந்து இருக்கிறீர்கள். #தமிழ்த்தாய்_வாழ்த்து
Sasikumar J
தீபாவளிக்கு மனைவி கூட துணி எடுக்க போன அவங்க கணவனுக்கு பொறுமைக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் அதில் எந்தவித தவறும் இல்லை…!
Mannar & company
ஏங்க.. தீபாவளிக்கு துணி எடுக்க எந்த கடைக்கு மொதல்ல போகலாம்
போத்தீஸா.. சரவணா ஸ்டோரா..?!
அடகு கடைக்குதான் மொதல்ல போகணும்!
ச ப் பா ணி
அடுத்தவனிடம் மட்டும் இருக்கிறதே என்று பொறாமை படாத ஒரு விஷயம்
“#சுகர்
கோழியின் கிறுக்கல்!!
ஆலமரத்தடி தாத்தாக்களே,
அந்த கால ‘கூகுள் மேப்’!!
balebalu
என்னடா பரீட்சை எழுதறப்போ சில வரிகளை மறந்து போயிட்ட
மாத்தி மாத்தி தப்பா எழுதி இருக்க
“துல்லியமா , பக்தி சிரத்தையோடு” படிச்சு எழுதி இருக்கேன் அண்ணே
அப்படித்தான் இருக்கும்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிஎஸ்பி
மோடியே திராவிடர் தான்… அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா