நண்பன் ஒருத்தன் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.
“என்ன மாப்ள… நைட்டு மழை பெய்யும்னு பீதிய கிளப்பி விட்டானுங்க… நல்ல வேளை மழை வரலைன்னு” சொன்னேன்.
“ஆமா மாப்ள.. ஒவ்வொரு நாளும் பக்கு பக்குன்னு தான் இருக்குன்னு” சொன்னான்.
“சரி… நீ சினிமா ரிவ்யூவர் தான. இந்த மழையை பத்தி நல்ல ஒரு ஒரு ரிவ்யூ சொல்லு பார்ப்போம்”
“மாப்ள… ஃபர்ஸ்ட் ஆஃப் அடுத்து என்ன அடுத்து என்னனு விறுவிறுப்பா இருந்துச்சு. நேத்து நைட்டு இன்ட்ரவல் பிளாக் செம்ம ட்விஸ்ட். ஆனா இன்னைக்கு செகன்ட் ஆஃப் புஸ்வானம் மாதிரி போயிருச்சுன்னு” சொன்னான்.
“டேய் இருடா நாளைக்கு தான் புஸ்வானமா இல்லையான்னு தெரியும்னு” அவன்கிட்ட சொல்லிட்டு டீக்கு பில் பே பண்ணிட்டு கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
mohanram.ko
ஊடகங்கள்-இன்னும் இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் வடியல
டேய், அது மெரினா பீச் டா
Sasikumar J
~ என்னடா யோசிச்சிட்டு இருக்க…!
~ இல்ல மழைக்கு முன்ன பேக்கரியில 10 பிரட் பாக்கெட் வாங்கிட்டு ஒருத்தன் போனான் அதை இப்ப என்ன பண்ணுவான் அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்…!
ச ப் பா ணி
மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்” – மதுரை ஆதீனம்
#பக்தி அதிகரிச்சா வெயில் வந்திடுமா சாமி
நெல்லை அண்ணாச்சி
அதிமுக ஆட்சி அமைய
எந்த “தியாகத்தையும்”
செய்ய தயார்..எடப்பாடியார்..!
# மீண்டும் முதலில் இருந்தா..?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுக சார்பில் Rapid Response Team அமைப்பு: இபிஎஸ்
# மெல்ல மெல்ல.. ஏன்னா வெள்ளத்துக்கு வலிக்க போகுது..
சரவணன்
ரெட் அலார்ட்னு பயமுறுத்திட்டு வராத மழைக்கு 500 ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வேற ஒரு கேடு
mohanram.ko
மழை, ராஜா பாட்டு, டீ, சூடா ஸ்நேக்ஸ்… இட்ஸ் எ பிளிஸ்…
புரிஞ்சிக்கோ மச்சான், ரெட் அலர்ட் அறிவிச்சு இருக்காங்கடா
✒️Writer SJB✒️
அதான் சென்னைல மழை வெள்ளம் ஒரே நல்ல வடிஞ்சுடுச்சே அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க?
நான் வேளச்சேரி ஏரியா லாட்ஜ் ஓனர் சார்
புக் பண்ண ரூம் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க சார்..!!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
மெட்ரோ ரயில் சேவை நாளை வழக்கம் போல் இயங்கும்!
வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!