அடைமழையிலும் பயங்கர அக்கப்போரு… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு சென்னையில பெஞ்ச மழைக்கு இடையிலே, அடிச்சி புடிச்சி மெட்ரோ ஏறி ஒருவழியா ஆபிஸ் பக்கம் வந்து சேர்ந்தேன்.

மெட்ரோ எக்சிட்ல நிறைய பேரு கொடையோட வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வெளிய செம்ம மழை பெஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அங்க நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தர் மழையை வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தாப்ல…

சரி இதுக்கு மேல நின்னுக்கிட்டு இருந்தா ஒப்பேறாதுன்னு கொடையை பிடிச்சுக்கிட்டு ஆபிஸ் நோக்கி கிளம்புனேன். “எக்ஸ்யூஸ்மி ப்ரோன்னு” பின்னாடி இருந்து ஒரு வாய்ஸ் வந்துச்சு.

“கொஞ்ச தூரம் நானும் உங்கக்கூட கொடையில வரலாமான்னு” அந்த வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தவரு கேட்டாரு.

“ப்ரோ இன்னைக்கு மழை வரும்னு தெரியும் கொடையை கூட எடுக்காம, மொபைல் போன மட்டும் தூக்கிக்கிட்டு வந்துருக்கீங்களேன்னு” சொன்னேன்.

“இல்ல ப்ரோ  இன்ஸ்டால இதெல்லாம் வீடியோ போட்டாதான் லைக்ஸ் நிறைய வரும்னு” சொன்னாப்ல…

“மழையில நனைஞ்சிக்கிட்டே போய் அதையும் ரீல்ஸ் எடுத்து போட்டா நல்ல லைக்ஸ் வரும் ப்ரோன்னு” சொன்னேன்.

“தேங்ஸ் ப்ரோ… குட் ஐடியான்னு” சொல்லிட்டு மழையில நனைஞ்சிக்கிட்டே வீடியோ எடுத்துட்டு கிளம்பிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
மத்த ஊர்ல மழை வந்தால் காய்ஞ்ச துணியை பத்திரப்படுத்த நினைப்பீங்க..
சென்னையில் மட்டும் தான் காரை பத்திரப்படுத்த நினைப்போம்
#ChennaiRains

Sasikumar J
~ மழை பெய்து பார்த்து பத்திரமா இருடா..
~ நாங்கல்லாம் 2015, 2023 அப்பறம் சுனாமியவே பார்த்தவங்க டா…
~ பத்திரமா இருடான்னு தானே சொன்னேன் எதுக்குடா இந்த டயலாக்…

balebalu
ஸ்டேஷன் மிக அருகில், ஏர்போர்ட் க்கு மிக அருகில் வரிசையில் இனிமேல்
“மேம்பாலத்துக்கு மிக அருகில் ” ன்னு ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வரலாம் 😀

நெல்லை அண்ணாச்சி
செம்பரபாக்கம் கண்ணுல வந்து போகுமில்லா…!!!
# சென்னையில்
பாலத்தில் ” car parking ”

Sasikumar J
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு என்ன வானவில்ல்லா…!
இல்ல வேளச்சேரி பிரிட்ஜில வரிசையா நிப்பாட்டி இருக்கிற கார்…!!

Mannar & company™🕗
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஜாக்கி வச்சி பத்தடி உயரத்துக்கு உயர்த்தினால் மழைத் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கலாம்,
இத சொன்னா நம்மள பைத்தியக்காரன்ம்பாங்கே!

செங்காந்தள்
மழை பெய்ததும் கரைபுரண்டு ஓடுகின்றன பாலிதீன் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும்…!!!

கோழியின் கிறுக்கல்!!
வாழ்க்கை கிரிக்கெட்டில் நாம் ‘டாஸ்’ வென்றிருந்தாலும்,
மனைவி நமக்கு தரும் ஆப்ஷன் “பௌலிங்கா, பீல்டிங்கா!?” என்பது மட்டும் தான்!!

balebalu
வழக்கமாக இடி , மழையுடன் சத்தமில்லாமல் பொழியும் மழை
சோ மீ , மீடியா வதந்திகளால் அதிக விளம்பரத்துடன் ஆரவாரமாக பொழிகிறது

mohanram.ko
பிரசவத்துக்கு இலவசம் என்று எழுத வேண்டியது…
ஆட்டோவில் அல்ல..
மருத்துவமனையில்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

சாம்சங் போராட்டம் வாபஸ்.. நடந்தது என்ன? – அமைச்சர் வேலு பேட்டி!

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

மழையிலும் மதுக்கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?: அன்புமணி கேள்வி!

+1
6
+1
13
+1
2
+1
7
+1
1
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *