இன்னைக்கு நைட்டு நண்பன் ஒருத்தனுக்கு கால் பண்ணி, “டேய் பாருக்கு போவோமான்னு” கேட்டேன்…
“நீ வேற… இன்னைக்கு தெரியாத்தனமா மெரினாவுக்கு ஏர் ஷோ பாக்க போயிட்டேன். உடம்பெல்லாம் வலிக்குதுன்னு” சொன்னான்.
“காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ. ஓரு பீர் சாப்டன்னு வச்சிக்க வலியெல்லாம் சிட்டா பறந்துரும்னு” அவன்கிட்ட சொன்னேன்…
“அப்படியா மாப்ள… அரைமணி நேரத்துல பாருல சந்திப்போம்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு
சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களை மீட்க
ஐகோர்ட் உத்தரவு…..!!!
# நடராஜர்…now…!!!
சரவணன். ????
சனிக்கிழமைல சாமிக்கு பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டமா நிக்கிறாங்க..
ஞாயிற்றுக்கிழமைல கறி வாங்கவும் கூட்டமா நிக்கிறாங்க..
என்னங்க இது.. எனக்கு ஒன்னுமே புரியல..
????????????????????????????
சமையலறைக்கு லீவு கொடுக்கும் நாளே பெண்களுக்கு உண்மையான ஞாயிறு!
சரவணன். ????
புரட்டாசி மாசத்துல கறி விலை கம்மியா இருக்கும்னு சொன்னவனை யாராச்சும் பார்த்தீங்களா..
குருநாதா
கவலைப்படாத மச்சான் எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்
என்னனு?
தெரியலைனு
கடைநிலை ஊழியன்
crowd allergy person –
எல்லாரும் மெரினா வ நோக்கி போயிட்டு இருக்காங்க.. பேசாம நம்ம வண்டலூர் zoo ‘க்கு போயிற வேண்டியது தான்..
ச ப் பா ணி
பலகார சீட்டு மோசடி செய்தி வந்தால்..
தீபாவளி பக்கத்தில வந்துருச்சுனு அர்த்தம்
தர்மஅடி தர்மலிங்கம்
“பாஜகவால்தான் இடஒதுக்கீடு பாதுகாப்பானது” – பிரதமர் மோடி!
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கின இடஒதுக்கீட்டை சொல்றாரோ.?!
Mannar & company™????
ஒண்ணு சைவம் சாப்பிடுங்க இல்லைன்னா அசைவம் சாப்பிடுங்க அதென்ன.. சைவ ஈரல்கறி, சைவ மீன் வறுவல், சைவ கறி குழம்பு!
புரட்டாசிக்காரங்களே ஏன்யா இந்த அநியாயம் பண்றீங்க?!
Sasikumar J
தக்காளி சூப் வாங்கி தர அவன் எங்க…!
ஆப்பிள் ஜூஸ் வாங்கி தர நீ எங்க…!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆர்.சி.பி கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா?- ஏபிடி கொடுத்த க்ளூ
சென்னைதான் டாப் : விமானப்படை தலைமைத் தளபதி!