இஸ்ரேல்-ஈரான் போர்தான் இன்னிக்கு செய்தில ஹாட் டாப்பிக்கா இருந்துச்சு.
வேலைய முடிச்சுட்டு ரூம்க்கு போய் ப்ரண்ட்ஸ்கிட்ட நியூஸ் சேனல் பாக்கனும் ரிமோட் கொடுங்கனு கேட்டேன்.
அதுக்கு அவங்க இன்னும் மூனு நாளுதான்… அதுக்கு அப்றம் நைட்ல ரிமோட் கேக்ககூடாது. இத விட முக்கியமான ஒன்னு போட போறங்கனு சொன்னாங்க
அப்படி என்னவா இருக்கும்னு… யோச்சிகிட்டே இருக்கும் போது ரொம்ப யோசிக்காத பிக்பாஸுனு சொல்லிட்டு என்னவிட்டுடே சாப்ட போய்ட்டாங்க…
மொதல் இவங்க ப்ரண்ட்சிப்ப கட் பன்னனும்
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
“உண்டியலில் பணம் போட்டா தான் வேண்டுதல் நிறைவேற்றுவேன்”னு எந்த கடவுள் சொல்லிச்சன்னு தெரியல.
படிக்காதவன்™✍
விக்கிற விலைவாசிக்கு
தீயா வேலை செஞ்சாதான் தீபாவளிக்கு சிறப்பா செலவு செய்யமுடியும்...
நெல்லை அண்ணாச்சி
அரசியல் வியூக
” நிபுணர் ” பிரசாந்த் கிஷோர்
கட்சி தொடங்கினார்….
# எனக்கும்….பசிக்கும்ல…!!!!
ச ப் பா ணி
ஏரியா லோக்கல் போலீஸை தெரிந்து வைத்திருப்பது..
அந்தக் கடவுளையே தெரிந்து வைத்திருப்பது போல
mohanram.ko
சைலண்ட்ல போட்ட ஃபோனை, எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கறதும்,
சைலண்ட்டா இருப்பவன் என்ன நினைப்பான்னு கண்டுபிடிக்கறதும்…
அவ்வளவு கஷ்டம்
vijaychakkaravarthy
புதன்கிழமைல ஒரு பொதுவிடுமுறை வந்தாலே அந்த வாரம் இவ்ளோ நல்லாருக்கே…
பேசாம எல்லா புதன்கிழமையவே விடுமுறையா அறிவிச்சுட்டா?
குருநாதா
இன்று உன்னுடையது எதுவோ அது
நாளை மற்றவருடையதாகும்
எது?
சம்பளம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
சென்னை மெட்ரோ 2 : நிதி ஒதுக்கி ஒப்புதல்!
14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்!