தீபாவளி கிஃப்ட் ரெடி… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு காலையில நம்ம பாஜக நண்பர் ஒருத்தர் கால் பண்ணியிருந்தாரு…

“என்ன நண்பா மாசத்தோட முதல் நாளே நம்ம ஜி தீபாவளி பரிச அறிவிச்சிட்டாரு போலன்னு” சொன்னேன்…

“அப்படி எதுவும் நான் கேள்விப்படலையேன்னு” சொன்னாப்ல..

“அட என்ன நண்பா நீங்க… வணிக சிலிண்டர் விலையை 48 ரூபா உயர்த்திருக்காங்க… நீங்க பார்க்கலையான்னு” கேட்டேன்…

“பார்க்கலைன்னு” சொல்லிட்டு கோவத்துல போன வச்சிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company
வரப்புயர நீர் உயரும்…
நீர் உயர நெல் உயரும்…
நெல் உயர குடி உயரும்…
குடி உயர கோல் உயரும்…
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர.. விலைவாசி உயரும்!

நெல்லை அண்ணாச்சி
வணிக சிலிண்டர் விலை உயர்வு…
# மோடிஜியின் தீபாவளி ” பரிசு ”

வசந்த்
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை
விரதம்லாம் முடிஞ்சுது போ… போ…

mohanram.ko
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை – SC
இது தெரியாம படிக்கட்டு எல்லாம் கழுவி விட்டேனேப்பா

ஒபாமா
ரோட்டு கடை ல ஹிந்தி காரண் சமைக்கும் போது அஜினமோட்டவை சும்மா அள்ளி அள்ளி வீசுறத பாத்த
தக்காளி…தின்னுட்டு இருந்தா இரு இல்லனா சாவு ணு சொல்ற மாதிரி இருக்கு

ச ப் பா ணி
நம் ஊர்ச்சாலையின் வேக கட்டுப்பாட்டுக் கருவிகள் மாடுகளும்,நாய்களுமே

mohanram.ko
லீவு மட்டும் கொடுக்கலைன்னா…
வேலையை விட போறியா…
வேலையா? , ஸ்கூல்ல இருந்து TC வாங்க போறேன்

கோழியின் கிறுக்கல்!!
அப்பாக்கள் மகனை அடித்து வளர்ப்பது திருமணத்திற்கு பிறகான வாழக்கைக்கான பயற்சி தான் !!

balebalu
வணிக சிலிண்டர் விலை உயர்வு – செய்தி
இப்ப எல்லாரும் திருப்பதி லட்டை மறந்து
தீபாவளி லட்டு விலை பற்றி கவலைபடணும்
அதான

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

அப்பல்லோவில் கஞ்சி அருந்திய ரஜினி

ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: 5 மணி நிலவரம்!

+1
1
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *