இன்னைக்கு டீக்கடைக்கு போனா அங்க மேயர பத்தி நெறய பேசிட்டு இருந்தாங்க… என்னான்னு விசாரிச்சா.. அவங்களுக்கு முன்னாடி போற தபேதார், அடிக்கிற கலர்ல லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு, அவங்கள விட ஸ்கோர் பண்ணிட்டாங்க போல… அதான் தபேதார.. டப்புனு வேற இடத்துக்கு மாத்திட்டாங்கனு’ சொன்னாங்க…
என்னய்யா இது லிப்ஸ்டிக் லாம் ஒரு பிரச்சனையானு கேட்டா… அதெல்லாம் ரெண்டு மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்னு ஒருத்த சொல்ல… எல்லோரும் அவரயே திடீர்னு உத்து பாத்தாங்க.
அவரே, “வீட்டுல இளையவளுக்கு மட்டும் லிப்ஸ்டிக் வாங்கி கொடுத்துட்டு, மூத்தவளுக்கு வாங்கி கொடுக்காம இருந்து பாருங்க… அப்போ தெரியும்”னு அவர் வீட்டு கதைய நேக்கா கோர்த்து விட்டு போயிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ArulrajArun
மனைவி அமைவதெல்லாம் Social media கொடுத்த வரம் – 2 kids
நெல்லை அண்ணாச்சி
மும்பை விநாயகர் கோவில்
லட்டு பிரசாத பாக்கெட்களில்
எலிக்குட்டிகள் …
# ” வாகனம் ” ஆச்சே.
அவுகளுக்கு இல்லாத உரிமையா..!!?
balebalu
11 நாள் விரதம் , பரிகார பூஜை ன்னு சொன்னவுடனே
சாப்பிடாம கொள்ளாம கோவிலே கதி ன்னு தவம் பண்ணுறாரா
அதான் இல்ல
பிரஸ் ஸை கூப்பிட்டு கேமிரா முன்னாடி மிரட்டல் விடுறார்
நெல்லை அண்ணாச்சி
பிரச்சனை…மலை
தீர்வோ…..கடுகு
what a…miracle..!!!
# கொழுப்பு vs மூத்திரம்
Writer SJB
ஆமா நீ ஆந்திரா துணை முதலமைச்சர் தானே?
தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்கறது தானே உன் வேல?
நீ என்னமோ கோயில் பூசாரி மாதிரியே பேசுற??
அன்பு நவீன்
Work la, தண்ணி குடிக்க மறந்து போய்ட்ரன் அப்படின்னு
Water bottle வாங்கினா,
இப்போ தண்ணி bottle ah மறந்துட்ரன்
black cat
யோசிச்சு பார்த்தா இந்த யோசிக்கிற பழக்கம் தான்
எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்னு தோணுது……
balebalu
மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்தாகும், அது அங்கேயே இருக்க வேண்டும்
இந்தியாவில் தேவை இல்லை- ஆளுநர் ரவி
அப்போ கவர்னர் என்ற பதவியும் ஐரோப்பிய கருத்து தானே
அது இந்தியாவில் வேண்டாமா ஆபீசர்
லாக் ஆப்
மும்பை சித்திவிநாயகர் கோவில் பிரசாதத்தில் எலிகள்?: நிர்வாகம் மறுப்பு!