புரட்டாசி பொறந்து ஒருவாரத்துக்கு மேல ஆகிடுச்சி… ஆனாலும் இந்த திருப்பதி லட்டுல மாட்டு கொழுப்பு கலந்த பிரச்சனை ஓயல…
இதுக்கு இடையில இன்னைக்கு மோகன் ஜிய பழனி பஞ்சாமிர்தம் கேசுல போலீஸ் தூக்கிட்டாங்க… இத பாத்துட்டு நண்பர் ஒருத்தரு… திருப்பதி லட்டு, பஞ்சாமிர்தம்னு பிரசாதம் மேலயே கேஸ் போய்கிட்டு இருக்கு…
இந்த சாராயம், பாஸ்ட் ஃபுட்டு, கூல்ரிங்க்ஸ்லனா என்னென்ன கலக்குறாங்கனு எளிய மக்களும் புரியுறா மாறி கண்டுபிடிச்சி சொன்னாங்கனா நல்லாருக்குமே’னு சொன்னாரு..
கொஞ்சம் பொறுங்க… அத பத்தியும் இன்னும் கொஞ்சம் நாளுல அடுத்தடுத்து வரும்னு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
அன்பு நவீன்
Work la, தண்ணி குடிக்க மறந்து போய்ட்ரன் அப்படின்னு
Water bottle வாங்கினா,
இப்போ தண்ணி bottle ah மறந்துட்ரன்
நெல்லை அண்ணாச்சி
மோடியை அழைக்க ” மறந்த ” ஜோ பைடன்…!!!
# எங்க ஊருல பெரிய தலக்கட்டு… Mr.President
Mannar & company
மழைத் தூறல் விழுந்தவுடன் கவிதை எழுத நினைக்கிறவன் மனுசன்,
காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுறவன் பெரிய மனுஷன்!!
வசந்த்
திருப்பதி லட்டுக்குள் குட்கா பாக்கெட்
பவன் கல்யாண்~ என்னோட விரதம் நீண்டுக்கிட்டே போகுமோனு பயமா இருக்கு தாஸ் அண்ணா…
ச ப் பா ணி
XL சைஸ் சர்ட் கிடைக்காமல் போகும் போது தான்..
வாக்கிங் போய் உடம்பை குறைக்கனுங்கிற எண்ணம் வரும்
mohanram.ko
லட்டு சாப்பிட்டதை விட, நீங்க பண்ற பரிகாரத்தை பார்த்தா தான் பயமா இருக்கு
ச ப் பா ணி
சொத்து இருந்தால் பரம்பரை பணக்காரர்
சுகர் இருந்தால் பரம்பரை வியாதிக்காரர்
mohanram.ko
இதுவே எனது கடைசி தேர்தல் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் ஒரு ஏழைத் தாயின் மகன்…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திருப்பதி லட்டுக்குள் குட்கா பாக்கெட்
டேய் கலை அலங்காரம்…. எல்லாரும் திரும்ப தோஷ பரிகார பூஜைக்கு கோமியம் புடிங்கடா…
கோழியின் கிறுக்கல்!!
என்னடா, லட்டு கரிக்குது!?
தோஷம் போக்க கோமியத்தை தெளிச்சு விட்டு இருக்காங்கப்பா!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
அதிகாரப் பகிர்வு… துணை முதல்வர்… அதே நிலைதான்: ஆ.ராசாவுக்கு ஆதவ் அர்ஜூனா பதில்!
சீசிங் ராஜாவை தொடர்ந்து திருச்சியில் பாய்ந்த குண்டு : ரவுடியை சுட்டுப்பிடித்த பின்னணி!