இன்னிக்கு பசங்கல ஸ்கூல்ல இருந்து அழைச்சிகிட்டு டீ கடைக்கு போனோம்.
பெரியவன்கிட்ட இன்னிக்கு என்னடா ஹோம் வொர்க் குடுத்தாங்கனு கேட்டேன்…
ஐம்பெருங் காப்பியங்கள்ல மணிமேகலை பத்தி எங்களுக்கு தெரிஞ்சத எழுதிட்டு வர தமிழ் டீச்சர் சொன்னாங்கப்பானு சொன்னான்…
அதுக்கு சின்னவன் மணிமேகலதான் குக் வித் கோமாளில இருந்து போய்ட்டாங்களேனு சொல்றான்
இவன எப்படி படிக்க வைக்கறது எனக்கு கஷ்டமா போச்சு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
Sasikumar J
எப்போதும் வாட்ஸ் அப்ல ஸ்டேடஸ் வைக்காம இருக்கறவன் புதுசா ஸ்டேட்டஸ் வச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கணும், இல்ல ரொம்ப சோகமா இருக்கணும்…!
balebalu
என்னடா ஏதோ யோசனைல இருக்க ?
லட்டுல இப்போ அனிமல் கொழுப்பும் கலந்து இருக்குறதால
அதுக்கு தனியா GST வரி போடுவாங்களா ன்னு
ஒரே குழப்பமா இருக்குண்ணே.
ச ப் பா ணி
திருப்பதி லட்டு விசயதத்தில் நம்மள மறந்திட்டாங்கப்பா
-அன்னபூர்ணா
படிக்காதவன்™✍
இன்னைக்கு நிலமையில
நாட்டுல தட்டுல லட்டுல
பஞ்சாமிர்தத்துல’னு எல்லாத்துலயும் பிரச்சினைதான்…
கொசு
ஹோட்டல்கார் மகன் : அப்பா இனி சிக்கன் 10kg வாங்கினா போதும்ல?
அப்பா: ஏன்டா ?
மகன்: இப்ப புரட்டாசி ஆச்சே அதான்..,நஷ்டம் ஆச்சுன்னா என்ன பண்றது
அப்பா :முட்டா பயலே 30kg வாங்குடா..
மகன் :எதுக்குப்பா 30kg
இனிமேல் தாண்டா வீட்ல சாப்பிடாம, ஹோட்டல்ல சாப்பிடுவானுங்க, என்னத்த தொழில் கத்துகிறியோ
கோழியின் கிறுக்கல்!!
பிறந்த நாளுக்கு நேர்லயே வாழ்த்து சொன்னா கூட,
WhatsApp groupல சொல்லலைனா கோவிச்சுக்கிறாங்க!!
நெல்லை அண்ணாச்சி
” புரட்டாசி ” மாதம்
திருப்பதி லட்டு
சாப்பிடலாமா.?? ..ஜோசியரே..!!
கடைநிலை ஊழியன்
ஒரு நல்லவனா அனுபவத்துல சொல்றேன்..
கெட்டது செய்றவனுக்கு தான், நல்லது நடக்குது.. நல்லது செய்றவனுக்கு, கெட்டது தான் நடக்குது..
நீங்க நம்பலனாலும் அது தான் நிசம்..
பாக்டீரியா
என்னடா பீப் பிரியாணி இனிப்பா இருக்கு..?
~ பீப் கிடைக்கல.. அதான் திருப்பதி லட்ட போட்டு பிரியாணி செஞ்சேன்..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
தாம்பரம் – கடற்கரை ரயில்கள் ரத்து…மாற்று ஏற்பாடு என்ன?