இன்னைக்கு சாயங்கலாம் டீக்கடைக்கு போலாம்னு கெளம்புனா… தினமும் அங்க தான போறோம் இன்னைக்கு பேக்கரிக்கு போவோம்னு சொன்னாரு நண்பர்.
ஓகேன்னு அங்க போனதும், நண்பர் சமோசா, பஜ்ஜினு வாங்கி சாப்பிட்டாரு…
நா கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாம்னு லட்டு எடுத்தேன். அத பாத்துட்டு, ’என்ன நண்பா லட்டு சாப்பிடுறீங்க… அதுல மாட்டு கொழுப்பு கலந்துருக்காங்கலாம்… சாப்புடாதீங்க’னு சொன்னாரு.
என்னயா லட்டுக்கு வந்த சோதனை… மதியானம் தான் பீப் பிரியாணி சாப்பிட்டு வந்தேன். இதுல மாட்டு கொழுப்பு இருந்தா என்ன? ஆட்டு கொழுப்பு இருந்தா என்ன?னு திருப்பி கேட்க நண்பர் ஆஃப் ஆயிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
நெல்லை அண்ணாச்சி
திருப்பதி லட்டு ” பிரசாதத்தில்..
மீன் எண்ணெய்.. மாட்டு கொழுப்பு…
#திருப்பதிக்கே….” லட்டு ”
Mannar & company™
மன அழுத்தத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது ஆப்பிள் ஐ-போன்! –செய்தி
அது என்னடா கண்டுபிடிக்கிறது எனக்கே தெரியுது மன அழுத்தம் வந்ததே அந்த ஆப்பிள் ஐபோனை வாங்க முடியலையேன்னுதான்..!!
நான்
“நட்டு”ல வச்சனு நினைச்சியா தாஸ்….
“லட்டு”ல வச்சன்…
Mannar & company
என்னடி இது காலை மதியம் நைட்டு மூணு நேரமும் அதே சாப்பாட்ட வச்சிருக்க?!
ஒரே வேலை.. ஒரே சாப்பாடு.
இனிமே இப்படித்தான் தனித்தனியாக மூணு வேளை சமைக்க முடியாது!
Naveen kumar
லட்டு மாதிரி கண்டெண்ட் கிடைக்குமா!? என பாத்தா லட்டே கண்டேண்டா கிடச்சிருக்கு..
கோவிந்தா கோவிந்தா
சரவணன் Ucfc
க்ரீம் பண்ணு லட்டுனு கண்டென்ட் எல்லாம் நல்லா சுவையா தான் இருக்கு…
mohanram.ko
ஏன்ணே அவனை அடிக்கறீங்க
லட்டு வாங்கிட்டு வாடான்னா, வெஜ் லட்டா, நான் வெஜ் லட்டா ன்னு கேட்கறான்
மயக்குநன்
அடப்பாவிகளா… ‘லட்டு’னு சொல்லி ‘அல்வா’ கொடுத்துருக்கீங்களே… நியாயமா..?!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மெச்சூரிட்டி எனப்படுவது யாதெனில், திங்கப்போகும் இடத்தில் சாப்பாடுடன் சேர்ந்து செல்பி எடுக்காமல் திரும்பி வருவதே ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
குரூப் 4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு : தமிழக அரசு!
பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு? : தமிழக அரசு விளக்கம்!