இன்னைக்கு ஆபிஸ்ல நண்பர் ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
நண்பர், ”நம்ம சென்ட்ரல் கவர்மென்ட்டு வெள்ளி கோளை ஆராய்ச்சி செய்றதுக்கு ஆயிரத்தி 236 கோடியும், மனுஷங்கள நிலவுக்கு அனுப்புற ககன்யான் திட்டத்துக்கு 20 ஆயிரத்து 193 கோடியும் நிதி ஒதுக்கியிருக்காங்கன்னு” சொன்னாப்ல…
”சரியா தமிழ்நாடுன்னு ஒரு ஸ்டேட் இருக்குதே.. போன வருஷம் பெய்த மழைக்கு நிவாரணம் கேட்டாங்களே, அதுக்கு மட்டும் ஏன்யா இன்னும் நிதி ஒதுக்குலன்னு” கேட்டேன்..
”இல்ல நண்பா… எல்லாமே உடனே பண்ண முடியாது. அறிவியலும் நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியம் தானேன்னு” மழுப்பலா ஒரு பதில் சொன்னாப்ல..
”என்னமோ பண்ணுங்கயா… இங்க இருக்குற மக்கள் ஏலியனா பொறந்திருந்தா கூட உங்க ஆட்சியில நிதி ஒதுக்கியிருப்பீங்க போலன்னு” சொன்னேன்…
”கண்டிப்பா நண்பா… ஏலியன் மாதா கி ஜேன்னு” சொல்றாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஒரு விவாகரத்து செய்தி என்ன செய்யும் ?
ஊர் பேர் தெரியாத பாடகியை உலகுக்கு அறிமுகபடுத்தும்
நெல்லை அண்ணாச்சி
தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும்….
மத்திய அமைச்சர் ….
அதானிக்கு தெரியாமல் பார்த்துக்கணும்..¡!!
Sasikumar J
இந்த வாரம் போனதே தெரியல…!
~ ஒர்க் ல ரொம்ப பிசியா…!
~ இல்ல ஃபுல்லா லீவு போட்டேன்…!!
குருநாதா
எனக்கு பிரியங்கா ரொம்ப புடிக்கும்
அப்ப மணிமேகலைய புடிக்காதா?
ம்ம்ஹூம் தேஷ்பாண்டேய புடிக்காது
ச ப் பா ணி
வாயிருந்தும் ஊமையாய் இருப்பது
“only admins can message வாட்ஸப் group”ல்மட்டும் தான்
black cat 🐈⬛
அவள் கண்கள் மீனை போல் இருப்பதால் புரட்டாசி மாதம் அவள் கண்களை நான் பார்ப்பது இல்லை
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
அதிகம் பயன்படுத்திய பொய்களில் முதன்மையானது
புன்னகை…..
பாக்டீரியா
கருப்பசாமி கும்புடர உங்களுக்கும் புரட்டாசிக்கும் என்னயா சம்பந்தம்..!? கும்பளோட கும்பளா ஐயோ பொரட்டாசின்னு ஒப்பாரி வக்கிரீங்க…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கூலி’ படத்தின் ஷூட்டிங் காட்சிகள் லீக்: படக்குழு ஷாக்… லோகேஷ் ரெக்வெஸ்ட்!
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)