இன்னைக்கு குஜராத்ல நம்ம ஜி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வச்சிருக்காரு. இதுல என்ன விசேஷம்னு கேக்குறீங்களா…
‘வந்தே மெட்ரோ’ங்கிற பெயரோட இயங்கி வந்த மெட்ரோ சேவையை ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’னு பெயர் மாத்திருக்காங்க…
இதெல்லாம் பார்க்குறபோது, ‘கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்’ காமெடி தான் மைண்ட்ல வந்துட்டு போகுது…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Mannar & company
‘ஊர் இரண்டுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’னு பழமொழி உண்டு, சேனல் இரண்டுப்பட்டால் கோமாளிகளுக்குக் கொண்டாட்டம்னு சொல்ல வச்சிருக்காங்க (குக் வித் கோமாளி, டாப் குக்கு டூப்பு குக்கு) கோமாளிகள்!!
Sasikumar J
காபி / டீ க்குள்ள மூழ்கின பன்னு மாதிரி தான் இந்த சனி, ஞாயிறு லீவு எங்க எப்படி போச்சுன்னு தெரியாது…!
Mannar & company™????
வேலைக்கு போறதுக்காக படிக்கிறவங்க இல்லடா இந்த இஞ்சினியர்ஸ்,
படிச்சதுக்காக வேலைக்கு போறவங்கடா இந்த இஞ்சினியர்ஸ்!HappyEngineersDay
தர்மஅடி தர்மலிங்கம்
“ஊழல், லஞ்சம் வார்த்தை இல்லாமல் பாஜக ஆட்சி” – நிர்மலா சீதாராமன்!
ஆமாமா… அதுக்கு சமீபத்தில் விழுந்து உடைந்த சத்ரபதி சிவாஜி சிலையே சாட்சி.?!
நெல்லை அண்ணாச்சி
ஜெயலலிதா ஆட்சி அமைக்காமல்
ஓயப்போவதில்லை….
சசிகலா சபதம்…!!!! ஆத்..தீ..!!
mohanram.ko
புரட்டாசி மாதம், ஆடு மாடு பி லைக் – நீதான் தைரியமான ஆளாச்சே, என்னை தொடேன், தொட்டு தான் பாரேன்….
ச ப் பா ணி
அண்ணா எனும் வார்த்தையை அரசியல் கட்சிகளை விட பல பெண்களே அதிகம் பயன்படுத்தியுள்ளனர்
தர்மஅடி தர்மலிங்கம்
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை?: எல்.முருகன்!
வாழ்த்து சொல்ல வயதில்லைன்னு வணங்கியிருப்பாரோ என்னவோ?!
கோழியின் கிறுக்கல்!!
ஆடி மாசம் துணிக்கடை தள்ளுபடி போடுற மாதிரி,
புரட்டாசி மாசம் கறிக்கடையும், ஹோட்டலும் தள்ளுபடி போட்டா கூட்டம் அள்ளும்,
ஐடியா இல்லாத பசங்க!!
நெல்லை அண்ணாச்சி
கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கிறார் மு.க.ஸ்டாலின்
…..வானதி சீனிவாசன்
#அது கண்ணாடி….மேடம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
நடிகை துன்புறுத்தல் விவகாரம்… முதல்வன் பட பாணியில் அதிரடி முதல்வர்!