ஜிஎஸ்டி பன் வேணுமா? ஜிஎஸ்டி இல்லாத பன் வேணுமா?: அப்டேட் குமாரு

கோவைல அன்னபூர்ணா சீனிவாசன் கீரிம் பன்னுக்கு ஜிஎஸ்டி போடுறத பத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கிட்ட முறையிட்ட விவகாரம் தான் இன்னிக்கு இணையத்துல வைரல் பேச்சு…

இத பத்தி பேசிக்கிட்டே நானும் என் ப்ரண்டும் டீக்கடைக்கு டீ குடிக்க போனோம்.

அப்போ என் நண்பன், அண்ணா ஒரு பன்னு குடுங்கனு கேட்டாரு…

அதுக்கு கடைக்கார அண்ணன், தம்பி ஜிஎஸ்டி பன்னா… ஜிஎஸ்டி இல்லாத பன்னானு கேட்டாரு…

நம்ம நண்பன் குழம்பிட்டாரு…

என்னனு திருப்பி கேட்டா… அதாம்ப்பா க்ரீம் பன்னா… இல்ல சாதா பன்னானு கேக்குறாரு…

அண்ணனுக்கு கோயம்பத்தூர் குசும்புதானு சொல்லிட்டு… சாப்ட்ட டீக்கும், ஜிஎஸ்டி பன்னுக்கும், சாரிங்க… க்ரீம் பன்னுக்கும் காசு கொடுத்துட்டு வந்துட்டோம்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J
ட்ரெயின்ல லோயர் பெர்த் கிடைக்கிற மாதிரி தான் நிம்மதியும் அவ்வளவு எளிதா எல்லாத்துக்கும் கிடைச்சுடாது…!

Image

Mannar & company™
ஆண் என்கிற BUNல CREAM-ங்கற கல்யாணத்தில் பெண் வந்து சேரும்போதுதான் GSTங்கற பிரச்சினைகள் வருது!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
உடல் தானத்துக்கும் தகனத்துக்கும் இடையில் உள்ள ஒரு எழுத்து வித்தியாசத்தில் மறுபிறவி எடுக்கிறது மனிதம்

ச ப் பா ணி
ஒரு நல்ல பழக்கத்தை நிறுத்திட்டு ஆரம்பிப்பது என்பது மழையில் நனைந்த டி.வி.எஸ் 50ஐ ஸ்டார்ட் செய்வது போல..அவ்வளவு சுலபமல்ல

நெல்லை அண்ணாச்சி
விமான போக்குவரத்துத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. ..
மோடிஜி ..பெருமிதம்
# for example… ” AIR INDIA ” விற்பனை…

Image

அன்னையின் பிள்ளை
ஓரே ஒரு மன்னிப்பால அன்னபூர்ணா ஹோட்டல் இந்தியா எங்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது..!
கீரிம் பன்னுக்கு நன்றி

புகழ்
மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு ஊடகங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்
போல..நன்றி அண்ணபூர்ணா உரிமையாளர்.

கோழியின் கிறுக்கல்!!
ஒருசில அழைப்புகள் “அழைப்பா, அறிவிப்பா” என்ற குழப்பத்துடனே வருகின்றன!!

Image

ச ப் பா ணி
பேருந்து நெருங்கி வர, இனம் புரியாத பரபரப்பு மனதில் மிகும்..
எப்படியாவது ஏறி இடம் பிடிச்சிடம்னு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

அன்று ஏ.கே.வி. – இன்று நிர்மலா சீதாராமன்…-அன்னபூர்ணாவின் ஃபிளாஷ்பேக்!

ராகுலும் நிர்மலா சீதாராமனும்… இந்தியாவைக் கலக்கும் கோவையின் ’ஸ்வீட்’ அரசியல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts