ஆப்பிரிக்க வெற்றிக் கழகமா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு ஃபுல்லா யானைய பத்திதான் பேச்சு… டீக்கடையும் அதுக்கு தப்பிக்குமா என்ன? சாயந்தரம் டீ குடிச்சிட்டிருக்கும்போது விஜய் கட்சியோட ரெட்டை யானைங்க பத்தி பேச்சு வந்துச்சு. அதுல தம்பி ஒருத்தரு, ‘ஏண்ணே… பாலின சமத்துவம்னு உறுதிமொழி எடுத்துக்கிட்ட விஜய், கட்சிக் கொடியில ரெண்டையும் ஆண் யானையால்ல வச்சிருக்காரு? ஏன் சரிக்கு சமமா ஒரு பெண் யானைய வச்சா என்னவாம்?’னு கேட்டாரு.
அதுக்கு இன்னொரு தம்பி… ‘உனக்கு விவரம் தெரியுமா? ஆப்பிரிக்க யானைக்கு ஆண், பெண் ரெண்டுக்கும் தந்தம் இருக்கும்’னு விஜய்க்கு ஆதரவா சொன்னாப்ல.
வடை போட்டுக்கிட்டிருந்த மாஸ்டர் உடனே, ‘அப்படின்னா விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகமா, ஆப்பிரிக்க வெற்றிக் கழகமா?’னு கேட்டாரே பார்க்கலாம்.
என்னய்யா… ஒரு கட்சிக் கொடிய வச்சிக்கிட்டு இப்படி பிச்சுப் பிச்சு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கீங்க? னு சொல்லிட்டு நான் எஸ்கேப் ஆயிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu
கொடி அறிமுகம் செய்த போது விஜய் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த் – செய்தி
ஒரு “துணை முதலமைச்சர்” பதவி பார்சேல்

நெல்லை அண்ணாச்சி
அரசியல் ” சூனாபானா” அண்ணாமலை…
செல்லூர் ராஜு கிண்டல்

குருநாதா
கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டுறவனோட மிகப்பெரிய நம்பிக்கை எதுதெரியுமா…?
நம்ம புள்ளயாச்சும் வாங்கிருவான்னு கார் பார்க்கிங்கோட வீடு கட்டுறது

கோழியின் கிறுக்கல்!!
TVK கட்சியோட First single release ஆகிடுச்சு போலவே!?
பாட்டுக்கு எத்தனை Views வந்து இருக்கு!?
இது Hitஆ!?

mohanram.ko
துணிக்கடைகளில் புத்தாடை அணிவதற்கு கூட ‘இமேஜ்’ பார்க்கறாங்க, கண்ணாடியில்

கடைநிலை ஊழியன்
பாட்டு கேக்க கேக்க நல்லாருக்கு மாமா..
“உசுரே நீதானே” தான மாப்ள.. ?
“உசுரே நீதானே” வா.. தமிழக வெற்றிக் கழகம் Flag Anthem மாமா..

கோழியின் கிறுக்கல்!!
இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் படங்கள்,
வாழ்ந்து கெட்ட குடும்பத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன!!

ச ப் பா ணி
உங்களுக்கு சிறந்த பதில்கள் வேண்டுமென்றால், சிறந்த கேள்விகளை கேளுங்கள்
-டிம் பெர்ரிஸ்

mohanram.ko
ஜி-20 மணி நேரம் ட்ரெயின்ல பயணம் பண்ண போறேன்னு சொன்னேனே தவிர, நம்ம நாட்டு ட்ரெயின்ல பயணம் பண்றேன்னு சொல்லல

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ : இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!

விஜய் கட்சி கொடி அறிமுகம் : துரைமுருகன் முதல் உதயநிதி வரை… அமைச்சர்கள் ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share