கொடி பறக்குதா? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.

மாஸ்டர் கிட்ட ஒரு லைட் டீ, ஒரு ஸ்டிராங் டீ ஆர்டர் பண்ணிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.

நண்பர், “நாளைக்கு விஜய் கட்சிக்கொடியும் பாட்டும் அறிமுகப்படுத்த போறாராம் பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல.

“ஆமா நண்பா… நம்ம அனிருத் தான் மியூசிக் போட்ருக்காராம். விஜய் கொடி ஏத்திட்டு ஒரு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாராம். இப்போம் தான் விஜய் நண்பர் ஒருத்தர் ஸ்டேட்டஸ் வச்சிருந்தாருன்னு” சொன்னேன்.

“அடப்பாவியா… கொடி ஏத்தப்போறாரா, இல்ல ஆடியோ லாஞ்ச் நடத்தப்போறாரான்னு” கேட்டாப்ள..

“ஒரே கல்லுல இரண்டு மாங்கான்னு” சொன்னேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கோழியின் கிறுக்கல்!!
இப்பெல்லாம் நிறைய பேர் “எங்க வேலை பார்க்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு,

“X Family”னு தான் பதில் சொல்வாங்க போல!!

குருநாதா
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது

முந்தானைல முடிஞ்சுவச்சிருந்த 500ரூவாய எடுத்தியா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிரண்டை கூப்பிடாம தனியா போயி டீ குடிக்கறதும் தீண்டாமை தான்..

தர்மஅடி தர்மலிங்கம்
கட்சிப் பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை – குஷ்பு! அடிக்கடி… கட்சி மாறும் பழக்கம் மட்டும் தான் இருக்குன்னு சொல்றாங்களோ.?!

ச ப் பா ணி
தெரிந்த விசயத்தை தெரிந்த அளவுதான் பேச முடியும். தெரியாத விசயத்தைத் தான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்

Mannar & company
முன்பெல்லாம் இரண்டாவது Opinion Google ஆக இருந்தது
இப்பல்லாம் நேராக Google தான்!

கோழியின் கிறுக்கல்!!
எல்லா தவறுகளுக்கும் சமூக வலைத்தளம் ஒரு தீர்ப்பை எழுதி விடுகிறது!!

குருநாதா
எய்ம்ஸ் பத்தி படமெடுத்து அதுல உதயநிதி நடிச்சா
என்ன பேரு வப்பாங்க

“செங்கலான்”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

இன்னும் ஒரே வாரம்தான்… சம்பாய் சோரன் முக்கிய அறிவிப்பு!

டிஜிட்டல் திண்ணை: திருமா உயிருக்குக் குறி… பாதுகாப்பு கொடுக்க அரசு மறுப்பா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share