நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். மாஸ்டர்கிட்ட டீ போட சொல்லிட்டு நண்பர் கிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டு இருந்தேன்.
நண்பர், “அடுத்த மாசம் விஜய் மாநாடு நடத்தி கட்சி கொடி வெளியிடப்போறாராமேன்னு” சொன்னாப்ல.
“அப்படியா.. அரசியல் கட்சி ஆன்லைன்ல ஆரம்பிச்ச மாதிரி கட்சி கொடியும் ஆன்லைன்ல தான் அறிமுகப்படுத்துவாருன்னு நினைச்சேன்னு” அவருக்கிட்ட சொன்னேன்.
“ஒருவேளை அப்படியும் செய்ய வாய்ப்பிருக்குன்னு” நண்பர் சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Sivakumar
டாஸ்மாக்’ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது -செய்தி
‘தள்ளாட்டம்’ மதுப்பிரியர்களுக்கு மட்டும்தான்னு நினைச்சோம்…மது விற்பனைக்குமா?
Kirachand
திமுக – பாஜக ரகசிய உறவு! – எடப்பாடி பழனிசாமி
அதிமுக – பாஜக ரகசிய உறவு ரகசியத்தை நீங்க எப்ப வெளியிடுவீங்க?
நெல்லை அண்ணாச்சி
குஷ்பு ன்னா நடுங்குவாங்க…
யார் சொன்னாங்க…!¡
-வேற யாரு…குஷ்பு தான்..!!!
Mannar & company
கேமராவுக்கு முன்னாடி உதவி செய்தால் ‘எடுத்துக் காட்டுகிறார்கள்’,
கேமராவுக்கு பின்னாடி உதவி செய்தால் ‘சொல்லிக் காட்டுகிறார்கள்’!
ச ப் பா ணி
சமையல் செய்யும் வீடியோக்கள் அதிகம் பார்ப்பதும்,
சமையல் செய்யவே பிடிக்காதுனு சொல்றதும் ஒரே பெண்ணா
Kirachand
கூட்டணி கட்சிக்காரர்களை விட அதிகமாக கலைஞரை சிறப்புப்படுத்தி பேசினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் – முதல்வர் ஸ்டாலின்
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் கட்சிகள் மாறுமோ?
மயக்குநன்
ராமரின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சென்றதில் கம்பர் முன்னோடி!- ஆளுநர் ரவி.
ஆனாலும்… சேக்கிழார் தந்த கம்பராமாயணத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் இபிஎஸ்தான் முன்னோடி..!
தர்மஅடி தர்மலிங்கம்
ஞாயிறுக்கு பின் வரும் திங்கள் திகிலானது!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு ஒரு பொது புத்தி இருக்கற மாதிரி, ஐடில வேலை செய்யறவங்க மத்தில இங்கிலீஸ் பேச தெரிஞ்சவன் நல்ல வேலை தெரிஞ்சவனா இருப்பான்னு ஒரு மூட நம்பிக்கை இருக்கு..
தர்மஅடி தர்மலிங்கம்
“அனைத்து இடங்களிலும் அரசியல் தேவையில்லை” – அண்ணாமலை!
அதை… சொல்றீங்களே தவிர சொல்ற மாதிரி நடந்துக்க மாட்டேங்குறீங்களே.?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
இசிஆர் சாலைப் பணிகள்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
மத்திய அரசு நடத்தியதா? உளறி கொட்டும் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தாக்கு!
Comments are closed.