ஊரப்பாக்கத்தலேயே லீவு முடிஞ்சிரும் போல : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நாளைக்கு சுதந்திர தினம், அதையடுத்து வர வீக்கெண்ட்… அதனால 4 நாளு லீவுக்கு சென்னைல இருந்து ஊருக்கு கெளம்பிட்டேன்.

அப்பா போன் பண்ணி 7 மணிக்கே வந்துருனு சொன்னாரு… அதனால நானும் இங்கே இருந்து 6 மணி பஸ்சுல  கெளம்பிட்டேன்.

மணி எட்டாச்சு… சரி கல்பாக்கம் தாண்டிருப்போம்னு தூக்கத்துல இருந்து எந்திச்சு பாத்தா… வண்டி ஊரப்பாக்கத்துல ஊர்ந்துகிட்டு இருக்குது…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
ராஜாஜியை விட ” நினைவாற்றல் “்மிக்கவர்
…இ.பி.எஸ்.
முன்னாள் அமைச்சர் பொன்னையன் புகழாரம்
# for example… கம்பராமாயணத்தை எழுதியவர் ..சேக்கிழார்..!!!

ச ப் பா ணி
“ஒவ்வொரு பிரச்சனையும் ஒருவனை அவனுக்கே அறிமுகம் செய்து வைக்கிறது.” – ஜான் மெக்டோனல்ட்

குருநாதா
கவுண்டம்பாளையத்துக்கு டிக்கெட் கெடைக்கல, எக்ஸ்ட்றா பணம் குடுத்து போனேன்
ப்ளாக்லயா?
பஸ்ல கூட்டம் ஆட்டோ எடுத்து போனேன்

balebalu
விணேஷ் போகத் வெள்ளி மெடல் மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு – செய்தி
இதென்ன அப்பாவு தேர்தல் தீர்ப்பு மாதிரி இப்போதைக்கு வெளிவராது போலயே

செங்காந்தள்
மட்காத நினைவுகளை எடுத்துக் கொண்டு, மட்காத பொருட்களைப் போட்டு விட்டு வருவதுதான் சுற்றுலா…!!!

ச ப் பா ணி
ஆட்டோ ஓட்டுநர் தான்.. துல்லியமான இலவச கூகுள் மேப்..

செங்காந்தள்
சட்டைப் பையில் இருப்பதை விட, மோதிர விரலில் பாதுகாப்பாய் இருக்கிறது பஸ் டிக்கெட்…!!!

கோழியின் கிறுக்கல்!!
ஏதாவது தவறு செய்தால் குத்திக் காட்டுபவருக்கு பெயர் எதிரி!
எதை செய்தாலும் குத்திக் காட்டுபவருக்கு பெயர் மனைவி!!

Thalapathi Thalapathi
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்…
300-ரூபாய்….
200-ரூபாய்க்கு வருமா?
சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க…
பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது….
அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க…?
ரோட்டுக்கடைதான் சார்…
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்….
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது….
ஒரு நடுத்தரவயது அம்மா,
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது….
வாங்க… இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
இட்லி, தோசை என சாப்பிட்டோம்.
எவ்ளோம்மா?
60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்…
மீதியை… சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா…
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க…
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்… அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்…
சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க… நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?
அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்… இல்லையா?
எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ண…
நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என… இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.
ஆட்டோ வீடு வந்து சேந்ததது…
இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்
என்னாச்சு அண்ணா? என்றேன்…
அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
ஒரு கணம் மூச்சு நின்றது…..
நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.
உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து விடுங்கள்…
புண்ணியம் நம்மை தேடி வரும்.
– படித்ததில் பிடித்தது….

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பினராயி விஜயன்

நிதி மோசடி : தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல்!

+1
1
+1
6
+1
1
+1
8
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *