”பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடிஞ்சி 2 நாளாயிடுச்சி.. அங்க இருந்து கடைசி ஆளா வினேஷ் போகத் கூட கிளம்பிட்டாங்க. ஆனா அவங்க வெள்ளிப்பதக்கம் கேட்டு போட்ட கேஸுல இன்னும் தீர்ப்பு வரல”னு டீக்கடைல புலம்பிட்டு இருந்தேன்.
அந்த நேரம் பாத்து நீதிமன்றம் அறிவிச்சிடுச்சினு டீக்கட மாஸ்டர் சத்தமா அங்கிட்டு இருந்து சொன்னாரு..
என்னானு கேட்டத்துக்கு, ’16ஆம் தேதி தீர்ப்பு அதுவரைக்கு ஒத்தி வைப்புனு’ சொன்னாரு..
”அட போங்கையா… இது செந்தில் பாலாஜி ஜாமின் கேஸ் பரவால்ல”னு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கோழியின் கிறுக்கல்!!
ஆபிஸ்ல வேலை செய்ய “நல்ல வேலை தெரிந்தவன் தேவையில்லை’,
எதை சொன்னாலும் கேட்பவனே தேவை!!
நெல்லை அண்ணாச்சி
ரொம்பவும் ஆட்டம் போட வேண்டாம்…
அதானியிடம் வித்துற போறாங்க..!!!
# BSNL
குருநாதா
எல்லாத்தையும் கடந்து போக பழகிகிட்டேன்
அடேய் அதுக்காக நான் குடுத்த கடனையுமாடா?
???????????? ™
90’s kid ~ நாங்கலாம் Schoolல அடிச்சாங்கனா வீட்ல சொல்ல மாட்டோம்
2k kid ~ ஏன் சொல்ல மாட்டிங்க?
90’s kid ~ Teacher அடிக்கிற மாதிரி நீ என்ன தப்பு பண்ணுனனு கேட்டு அவங்களும் அடிப்பாங்க
ச ப் பா ணி
பசி வந்திட ஐநூறு, ஆயிரம் பறந்து போகும்
ஹோட்டலில்
குருநாதா
~be positive எல்லா கஷ்டமும் கொஞ்ச நாளைக்குதான்
கொஞ்ச நாளைக்கு அப்புறம் சரியாயிருமா?
புதுபுது கஷ்டமா வரும்
ச ப் பா ணி
Software update App update..
அட சும்மா சும்மா சொல்லாதடா
போன் மெமரியே கொஞ்சம்தாண்டா இருக்கு
கோழியின் கிறுக்கல்!!
விட்டு விட்டு பொழியும் பருவ மழையாய் நீ,
ஏறி இறங்கும் மேட்டூர் அணையாய் நான்!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்