இன்னைக்கு வாட்ஸ் அப்ல ஒரு நோட்டீஸ் சுத்திட்டு இருந்துச்சி… பாத்ததும் மிரண்டுட்டேன்.
அதுல விஜய் கட்சியைப் பற்றி அரசியல் ஆய்வு நடத்த போறாதாவும், அதுக்காக அவசர செயற்குழு கூட்டம் நடத்த போறாதாவும் போட்டுருந்துச்சி…
இதெல்லாம் பன்றது யாருன்னு பாத்தா, ’மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமாம்…
இத பாத்ததுட்டு சமுத்திரகனி சொன்ன ‘யாருய்யா நீங்க’ டயலாக் தான் மைன்ட்ல வருது
அதுசரி அவிங்களுக்கு என்ன அவசரமோ…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
Kirachand
போகாத ஊருக்கு வழி சொல்வதுதான் கூகுள் மேப்!
கடைநிலை ஊழியன்
மாப்ள.. netflix subscription வேணுமா மாப்ள..
எதுக்கு.. உனக்கு தலைவலி வந்தது பத்தாது னு.. எனக்கும் வரணுமா.. போவியா அங்கிட்டு..
balebalu
சபாஷ் மாப்ள விருந்து ன்னா அப்படித்தான் இருக்கணும்
விருந்தா அடுத்த ஆடி வரைக்கும் அதையே ப்ரிட்ஜ் ல வெச்சு சாப்பிடணும் ன்னு
சொல்லிட்டாங்க மாமா
ச ப் பா ணி
பேச்சுலர் ரூமை சுத்தப்படுத்துதல் என்பது.. திரும்பவும் குப்பைகளைப் போடத்தான்.
சரவணன். 𝓜
போதை கலாசாரத்திற்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எங்க.. டாஸ்மாக் கடைக்கு முன்னாடிங்களா சார்..
balebalu
SEBI India நவ் :
அப்பாடி
டிவிட்டர் அக்கௌண்டு பூட்டு போட்டாச்சு
இனிமே ஒரு பய கேள்வி கேக்க முடியாது
ச ப் பா ணி
பெத்த கடன் என்பதில் அப்பா வாங்கிய கடனை அடைப்பதும் அடக்கம்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பழசு எதையும் நான் மனசுல வைச்சுக்க மாட்டேன் மாமா.. உடனுக்குடன் மறந்துருவேன்..
நல்ல பழக்கம் மாப்ள.. நமக்கு வர்ற தோல்வி ஏமாற்றம் எல்லாத்துயும் அப்படித்தான் மறக்க பழகிக்கனும்..
தோல்வி ஏமாற்றமா..? என் பாஸ்வேர்டு, ஆபிஸ்ல எனக்கு தர்ற வேலை இதெல்லாம் மறந்துருதுன்னு சொல்றேன் மாமா..
கோழியின் கிறுக்கல்!!
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இரண்டு வகை,
1) எதுக்கும் எல்லா எடுத்து பாரத்துடலாம்!!
2) இந்த டெஸ்டெல்லாம் எதுக்கு எடுத்து பாரத்துட்டு!?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
ஆணவப் படுகொலையை ஆதரித்து பேசிய ரஞ்சித் : விசிக புகார்!
சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!