காதல் ஜோடிகளை இணைக்கும் ஒலிம்பிக் பாரிஸ் நகரம்ங்குற தலைப்புல ஒரு செய்தி படிச்சேன்.
அந்த செய்தியை என் ஃப்ரெண்டுக்கு அனுப்பி, “ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கியே, பாரீஸ் போனா உனக்கும் ஒரு பொண்ணு செட் ஆகிரும்னு” மெசேஜ் பண்ணேன்.
இதை அவன் பார்த்ததுட்டு, “டேய் உள்ளூர் பொண்ணே உஷார் பண்ண முடியல… இதுல பாரீஸ் வேறயான்னு” கமெண்ட் பண்ணான்.
அவனுக்கு சிரிக்கிற ஒரு எமோஜி அனுப்பி, ஆறுதல் மெசேஜை தட்டிவிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
மத்திய அரசே தேசிய பேரிடராகத்தான் இருக்குன்னு கனிமொழி அக்கா சொல்லி இருக்காங்களே… அப்படின்னா அதுக்கு நிவாரணத்தொகை எப்ப கொடுப்பாங்கன்னு கேட்குறாம்பா…
ரஹீம் கஸ்ஸாலி
மழை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம், மழை பிடிக்காது என்பதற்காக அல்ல.. மழை பெய்தால் கரண்ட் போய்டுமே என்ற கவலையில்தான்.
கடைநிலை ஊழியன்
மச்சான்.. எனக்கு memory power அதிகம் டா..
எங்க உங்க வீட்டுல இருக்குற நாலு பேரு ஃபோன் நம்பர்ர இந்த பேப்பர் ல எழுது பாப்போம்..
ச ப் பா ணி
I Know is a word
எனக்கு அப்பவே தெரியும் is an emotion
பாலசுப்ரமணி
“எல்லாரும் ஒரு புளு டிக் வாங்க பணம் கட்றாங்க. ஆனால் நான் பணமே கட்டாமல் ரெண்டு புளு டிக் வாங்கறேன்”
“எப்படிடா?”
“வாட்ஸ்அப்லதான்”
கோழியின் கிறுக்கல்!!
தோல்வி பயம் இல்லை எனக்கு,
அதற்கு பின்பான அறிவுரைகளுக்கே அதிக பயம்!!
பால முருகன்
காலை CM : எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார்.
மாலை வருண பகவான் : அப்படியா இதோ உங்களுக்காக
மாஸ்டர் பீஸ்
இங்கு ஒன்றை விட ஒன்று சிறந்தது என்பது ஒரு முடிவிலி நம் கையில் இருப்பதுதான் நமக்கான பொக்கிஷம்!!!
செங்காந்தள்
நீர் மேலாண்மை என்பது மினரல் வாட்டர் பயன்படுத்தும் போது மட்டும் எல்லோராலும் கடைபிடிக்கப்படுவது…!!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி
5 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்!