காலாண்டு தேர்வு லீவு, காந்தி ஜெயந்தி லீவு முடிஞ்சி இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு திருநெல்வேலி ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தா… பிளாட் பார்ம்ல நிக்க கூட இடம் இல்ல…
சரி பஸ்ல போகலாம்னு பாத்தா… கவர்மெண்ட் பஸ் அல்ரெடி ஃபுல் ஆயிருக்கு… பிரைவேட் பஸ்ல போகலாம்னு நினைச்சி கூட பாக்க முடியாத அளவுக்கு டிக்கெட் விலை இருக்கு…
சரி என்ன தான் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தா…. மோடி இன்னும் 5000 டிக்கெட்ல தூங்குற வசதியோட வந்தே பாரத் ரயில் விட போறாருன்னு நியூஸ் வருது…
இனி காசு உள்ளவனும், கார் உள்ளவனும் மட்டும் தான் பஸ், டிரெயின்ல போக முடியும். மத்தபடி காசு இல்லாதவங்க அவங்கள போல யாத்திரை தான் போகனும் போல… ரைட்டு நடப்போமா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
Kirachand
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார்! – முதல்வர் ஸ்டாலின்
தீயா வேலை செய்யணும் குமாரு…இல்லை பதவி பறிபோய்விடும்…ஆமா…
Mannar & company
ஒரு கோடுக்கு பக்கத்தில் சின்னக் கோட்டைக் கிழித்து அதை பெரிய கோடாக் காட்டுவது போல..
அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை காட்டுவதற்கு மற்ற ரயில்களின் வேகத்தை குறைத்திருப்பதும்!
ஜோ
மஹாராஷ்டிரால கடந்த 24 மணிநேரத்தில மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறையால 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் பலி.
~ பலகோடி செலவழிச்சு, MLA வ வாங்கி ஆட்சியை பிடிக்கத்தெரியுது, ஆனா மருந்து வாங்க காசு செலவு பண்ண மனசு வரல. இப்ப 24 பேரை கொலை பண்ணிட்டாங்க
balebalu
மாடுலர் கிச்சன் வேணும் ன்னு வித விதமா டிசைன் செய்து கட்டிய வீட்டில்
காபியும் , இட்லியும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டது #முரண்
தர்மஅடி தர்மலிங்கம்
“பாஜகவில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள்” – ஓபிஎஸ்!
எதுக்கு… பாஜகவுல சேர்ந்துக்க சொல்லிங்களா..?
mohanram.ko
நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும்…
நடவடிக்கை எடுப்பீங்களா? இல்ல, வேதனைப்படுவேன்
மயக்குநன்
பாஜகவுடன், நானும் டிடிவி தினகரனும் 3 மாதங்களாக தொடர்பில் உள்ளோம்!- ஓபிஎஸ்.
ஓகோ… அதான் இபிஎஸ் அண்ட் கோ பாஜககிட்ட இருந்து ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ போயிட்டாங்களோ..?!
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு: என்ன காரணம்?
உலகக்கோப்பை 2023: 10 அணிகள்… ஒரு டிராபி… வெல்லப்போவது யார்?