நிலா விலகுது… நேரம் கூடுது: அப்டேட் குமாரு

ரொம்ப நாள் கழிச்சு அண்ணாச்சி கடையில டீ குடிக்க போனேன். பேப்பர் படிச்சிட்டு இருந்த தம்பி திடீர்னு, அண்ணே இங்க பாருங்க பூமியை விட்டு சந்திரன் விலகி போகுதாம்… அதனால ஒரு நாளைக்கு இப்ப இருக்குற 24 மணி நேரம் இனிமே 25 மணி நேரமா ஆகப்போகுதாம் அப்படின்னு சொன்னாப்ல.

இதை கேட்டுக்கிட்டு இருந்த இன்னொருத்தரு படக்குனு கையில கட்டி இருந்த வாட்சை பாத்துட்டு… ‘ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அதிகமாகும்னா… ஆபீஸ்ல இனிமே 9 மணி நேரம் வேலை பார்க்கணுமா?’ அப்படின்னு பதறிக்கிட்டு கிளம்பிட்டாரு.
அவன் கவலை அவனுக்குனு சிரிச்சுகிட்டே டீய போட்டாரு மாஸ்டர்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

 

Mannar & company
அப்பா இருக்குறப்போ கத்தி கத்தி அவர் நமக்கு சோறு வச்சா அது ‘தண்டச்சோறு’,
அப்பா இல்லாதப்போ நாம கத்தி கத்தி காக்காவுக்கு சோறு வச்சா அது ‘பிண்டச்சோறு’!

பர்வீன் யூனுஸ்
ஒரு படத்தோட ரிசல்ட்டை அது ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதில் இடம் பெறும் பாடல் வரி மூலம் சொல்லிய ஒரே படம் ‘இந்தியன் -2’ # தாத்தா வராரு.. கதற விட போறாரு.

Mannar & company™????
சாதாரண தண்ணீர்தானே அதுக்கு எதுக்குண்ணே மக்கள் இவ்வளவு சந்தோஷமா ஆற்றில் சாமி கும்பிட்டு பூஜை செய்து கொண்டாடுறாங்க?
கர்நாடகக்காரங்க எத்தனை அணைப்போட்டு தடுத்தாலும் நமக்காக அதிக அளவில் மழைப்பேஞ்சு காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுப் பக்கம் வருதுல்ல அதுக்காகவும்தான்!
#ஆடிப்பெருக்கு

சரவணன். ????
புலி பதுங்குதுன்னா…
~ பாயப் போகுதுன்னு அர்த்தமா?
அதான் இல்ல, வயசாகிடுச்சு அர்த்தம்..

balebalu
வீட்டு ஜன்னலில் நாய் , பூனைகள்
இயற்கையை ரசித்தபடி
வீட்டுக்குள் மனிதர்கள்
மொபைலை ரசித்தபடி

Sasikumar J
எல்லாருமே அடுத்தவங்க நம்மள புரிஞ்சுக்கணும் அப்படித்தான் நினைக்கிறாங்க யாரும் அடுத்தவங்க நிலைமையை புரிஞ்சுக்க தயாரா இருக்கறது இல்ல இந்த உலகம் எப்படி மாறிடுச்சு…

Kirachand
ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன்! – அண்ணாமலை
ஏர்போர்ட் மேற்கூரை சரிந்து விழுந்துடுமோன்னு பயப்படுறாரோ?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‛மழை பிடிக்காத மனிதன்’… விஜய் மில்டன் ஷாக் தகவல் : அது எப்படி நடக்கும்?

காங்கிரஸ் வேறு கூட்டணிக்கு செல்கிறதா?: செல்வப்பெருந்தகை பதில்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts