இன்று இணையத்தில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்டுகளை இன்றைய அப்டேட் குமாரில் பார்க்கலாம்.
balebalu
வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால்
5 ஆண்டுகளில் ₹8,500 கோடி அபராதம் வசூலித்த பொதுத்துறை வங்கிகள் – செய்தி
மல்லையா , நீரவ் மோடி மாதிரி கடனை கட்டாம வெளிநாட்டுக்கு தப்பி ஒடியவங்க பணத்தை வசூல் செய்ய
எங்களுக்கு வேற வழி தெரியல்ல ஆத்தா
ச ப் பா ணி
சிக்னலை கவனிக்கவில்லை என்றால்..
போலீஸை “கவனிக்க” வேண்டும்
வசந்த்
என்ன கேட்கிற சாமிய?
நூறு ஜென்மம் உன் கூட
நானே 40 வயசுக்கு மேல இருப்பனானு தெரியாது போவியா…
ச ப் பா ணி
புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் முகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது..
புன்னகையின்றி.!
கடைநிலை ஊழியன்
காலம் கலிகாலம் ஆகிருச்சு தம்பி.. வாங்குன கடன, ஒரு பையன் திருப்பி தர மாட்டிங்குறான்..
அதெல்லாம் சரி தான்.. அத எதுக்கு சார், என் கிட்ட சொல்றீங்க..
ச ப் பா ணி
உலகத்தில் நம்மை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஆறுபேர்..
ஆதார்கார்டு, பான் கார்டு,
ரேசன் கார்டு,ஐ.டி கார்டு
வாக்காளர் அட்டை,ஓட்டுநர் அட்டையில்
இருப்பவர்களே
தர்மஅடி தர்மலிங்கம்
டிப்ரசனா இருக்குன்னு ட்ரிப்புக்கு போயிட்டு வந்த, இப்போ ஏன் மறுபடியும் டிப்ரசனா இருக்க.?!
ட்ரிப்புக்கு ஆன செலவு நெனைச்சு தான்…
மயக்குநன்
அடம் பிடித்த’ பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினி!
அதையும் ‘படம் பிடித்து’ பப்ளிசிட்டி பார்த்துட்டீங்களே தலைவா..!
பரமசிவம் ராமசாமி
எவ்வளவுக் எவ்வளவு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா…
அவ்வளவுக்கு அவ்வளவு தெரியாதது நிறைய இருக்கிறது எனத் தெரிந்து கொள்கிறோம்…
கோழியின் கிறுக்கல்!!
போக போக சரியாகிடும்” என்பதற்கு “பழகிடும்” என்பது தான் உண்மையான பொருள்!!
லாக் ஆப்