இன்னிக்கு வழக்கம் போல நம்ம அண்ணன் கடைக்கு, டீ குடிக்க போனேன். அங்க டிடிவி தினகரன் பேட்டி டிவியில ஓடிட்டு இருந்துச்சு. 2026ல கண்டிப்பா என்.டி.ஏ ஆட்சி அமையும்னு சொன்னாரு….
அத கேட்ட என் பக்கத்துல உட்கார்ந்திருந்தவரு, ‘அம்மா ஆட்சி எல்லாம் மறந்து போச்சு போலன்னு’ சொல்லிட்டு போறாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ArulrajArun
ஏன்ணே அவன அடிச்சிங்க
பின்ன என்னப்பா பீகார்க்கு இவ்ளோ பணம் குடுக்குறாங்களே
ஏழு பாலம் விழுந்தத சரி பண்ணுவான்னு கேட்கிறான்
நெல்லை அண்ணாச்சி
5 கிலோ ” தங்கம் ” வாங்கி fridge ல
வச்சிற வேண்டியதுதான்…வரி குறைப்பு…!!
ச ப் பா ணி
நீரடித்து நீர் விலகாது போலத்தான்.. பைக் ஹார்ன் அடித்து பைக் விலகாது
mohanram.ko
ஒரு மாசத்துல, 20 நாளுக்கு மேல நீ சம்பாதிக்கற ஒவ்வொரு ரூபாயும் அரசாங்க வரிக்கானது
கடைநிலை ஊழியன்
மஸ்க் – எப்படி ஒரு பத்து பேருக்கு 200$ போட்டுவிட்டு, எல்லாருகிட்டயும் பத்து பத்து டாலர் வாங்குனேன் பாத்திங்களா டா..
வியாபாரி னே நீங்க..
ச ப் பா ணி
உரையாடும் போது பிறர் தேவையில்லாததை பேசும் போது..skip add செய்யும் வசதி இருந்தால் தேவல
வெண்பா
2026-ல் என்.டி.ஏ ஆட்சி! – டிடிவி தினகரன்!
#400க்கும் குறையாது எனும் வார்த்தை போல
ℳsd இதயவன்
தேசத்தின் வளர்ச்சிக்கான மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது ~ சரத்குமார்
காமராஜர் இப்படி தான் வழிகாட்டினாரா உங்களுக்கு?!
லாக் ஆஃப்