இன்னிக்கு நண்பர்களோட டீ கடைக்கு போனோம். அதுல ஒருத்தரு சோஷியல் மீடியா அக்கவுண்ட்ட பாத்துட்டே வந்தாரு.
என்னப்பா போன பாத்துகிட்டே வரனு கேட்டேன்.. அதுக்கு அவரு மோடிய மட்டும் ட்விட்டர்ல 10 கோடி பேர் ஃபாலோ பன்றாங்கனு எலன் மஸ்க் வாழ்த்து தெரிவிச்சுருக்காருனு சொன்னாப்ல…
அதுக்கு இன்னொருத்தரு… அதுல பாதி பேர் ஃபேக் ஐடினு தெரில… அதான் வாழ்த்து சொல்லிருக்காருனு கமெண்ட் அடிக்கிறாரு…
அதுக்கு டீக்கடைக்கார அண்ணன், ஆமாம்ப்பா ஒரே ஃபேக் ஐடி ப்ரண்ட்ஸாவே இருக்காங்கனு பதிலுக்கு சொல்றாரு.
இதனால் தான் நான் சோஷியல் மீடியாவுலேயே இல்லனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
Kirachand
வாங்குன கடனை அடைக்க ஒருவழியா ஒரு வழி கண்டுபிடிச்ட்டுட்டேன் மாமா!
என்ன வழி மாப்ள?
இன்னொருத்தர் கிட்ட கடன் வாங்கணும்!
ச ப் பா ணி
My Dads Gift “னு எழுதியிருக்கிற பெரும்பாலான பைக்குகள் அப்பாவோட EMIல் வாங்கியதாகத்தான் இருக்கும்
balebalu
யாரோ வருவார் யாரோ போவார் வருவதும் போவதும் தெரியாது –
இன்றைய சோ மீ க்கு பொருத்தமான எப்பேர்பட்ட வரிகள்
ச ப் பா ணி
A rose is a rose is a rose
-ஜெர்ட்ரூட் ஸ்டீன்
“ஒரு ரோஜா என்பது ஒரு ரோஜா என்பது ஒரு ரோஜா”. ரோஜா மலரை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவே
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரி பீல் பண்றேன் புரோ..
என்ன எல்லாம் இருக்கு புரோ?
மனசு நிறைய கவலை, சம்பளத்துக்கு மீறின கடன்,
வயசுக்கு மீறின டிப்பரசன், இது மாதிரி இன்னும் நிறைய..
வெண்பா
எத்தனை வல்லாரை சாப்பிட்டாலும்.. குக்கர் விசில் எண்ணிக்கை மட்டும் மறந்துவிடுகிறது
Sasikumar J
இருக்கிறவன் சாப்பிடாம இருந்தா அதுக்கு பேரு ‘விரதம்’
இல்லாதவன் சாப்பிடாம இருந்தா அதுக்கு பேரு ‘பட்டினி’
கோழியின் கிறுக்கல்!
ரிட்டயர் ஆன அம்மா, அப்பா வீட்ல இல்லைனா,
பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வது சாத்தியம் ஆகாது!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
2026 தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு!