ஹை பசிக்கு ஏது புரட்டாசி?: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

காலையில ஏதோ ஞாபகத்துல அக்கா மிச்சம் இருந்த முட்டைய உடைச்சு ஆம்லேட் போட்டுட்டாங்க. இதைப் பார்த்துட்ட அம்மா… ஏண்டி புரட்டாசி பொறந்துடுச்சுடினு சத்தம் போட்டுக்கிட்டே தோசைக் கல்லையே கொண்டு போய் கொல்லையில போட்டுட்டாங்க.

ஆனா புரட்டாசியிலயும் ஹை பசியா இருந்ததால ரெண்டு ஆம்லேட் டையும் நானே வாயில போட்டுட்டேன். நீங்க அப்டேட்ஸ் பாருங்க

சரவணன். 𝓜
புரட்டாசி மாதத்தில் கறி வாங்கி சமையல் செய்யாமல் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் அனைவரும் பற்றுள்ள இந்துக்கள் என்று அர்த்தம் இல்லை.
கறி வாங்க காசு இல்லாதவர்கள் என்றும் அர்த்தம்..

மயக்குநன்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போக வேண்டிய நேரம் வரும்போது கண்டிப்பாக செல்வேன்- சசிகலா.
சிபிசிஐடி இல்லாத நேரமா பார்த்து போங்க சின்னம்மா..!

amudu
சீரழிந்து வரும் மாணவ சமுதாயத்தை மீட்டெடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். -அன்புமணி ராமதாஸ்.
மதுக்கடைகளை மூடினால், தமிழக அரசையை மீட்டெடுக்க முடியாதே.

Zen Selvaa
ஆ.ராசாவை டெபாசிட் வாங்க விட மாட்டோம் – பாஜக மாநில பார்வையாளர்
காமெடி பண்ணாம – நீங்க முதல்ல டெபாசிட் வாங்குற வழியப் பாருங்க…!

மயக்குநன்
‘பொங்கல்’ என்றாலே திராவிட மாடல்தான் ஞாபகம் வரும்!- இபிஎஸ்.
‘இட்லி’ என்றாலே அப்பல்லோ ஞாபகம் வர்ற மாதிரியா..?!

உள்ளூராட்டக்காரன்
ஒயின் ஷாப் லீவுன்னு தெரிஞ்சதும் சரக்கடிக்கணும்னு தோணுறதும்
புரட்டாசி மாசம்னு தெரிஞ்சதும் கறி திங்க தோணுறதும்
இட் ஹேப்பன்ஸ்

Sasikumar J
பொறுமை கடலினும் பெரிது…
பொண்டாட்டியிடம் பொறுமையாக இருப்பவன் அதிலும் பெரிது…!

சாணக்கியன்
2024 பதில் சொல்லும். பிரதமரின் திறமையை பார்த்து வியக்கிறேன்- சுரேஷ் கோபி
அது தான் அவர் கூவிக்கூவி விற்கும் திறமையை நாடே பார்த்துட்டு தான் இருக்கே….

லாக் ஆஃப்

அன்பில் மகேஷை வரச் சொல்லு : அப்டேட் குமாரு

+1
0
+1
1
+1
1
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *