சென்னையிலேர்ந்து திருநெவேலி போறதுக்கு ஆம்னி பஸ்ல ஒருத்தருக்கு மூவாயிரம்னா ஒரு குடும்பத்துல அஞ்சு பேரு போறதுக்கு 15 ஆயிரம் ரூபா ஆவுது. பதினஞ்சாயிரம் செலவு பண்ணி ஆம்னி பஸ்ல போறதுக்கு பதிலா ஃப்ளைட்ல போயி வாழ்நாள் ஆசைய தீர்த்துக்கலாம். அதனால ஆயுத பூஜைக்கு திராவிட மாடல் அரசாங்கம் விமான சேவைய ஆரம்பிச்சிட்டாங்கன்னா ஆம்னி காரனுக்கு அழுறதுக்கு பதிலா.. அரசாங்கத்துக்கிட்ட கொடுத்துட்டு ஃப்ளைட்ல ஜாலியா போகலாமே… என்ன நான் சொல்றது? யாராவது அரசாங்கத்துக்கிட்டே சொல்லுங்களேன்….
நான் அப்டேட்ஸ் பாக்குறேன்…
amudu
மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு. -இபிஎஸ்.
ஏன்… நீங்க சொன்ன அந்த 40 அமாவாசை அப்போ தான் முடியுதா.

Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
ஒரு ‘ஜி’யே தாங்க முடியல… அஞ்சு ‘ஜி’ய எப்படி தாங்குறதுன்னு கேட்கிறாம்பா?

amudu
போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா. -ராஜ்நாத் சிங்.
தேர்தல் சமயத்தில் போரை வரவைக்கும் நாடு தான் இந்தியா.

balebalu
அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5G – மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர்
அதுவரைக்கும் அது அரசாங்கத்துக்கிட்ட இருக்குமா ?

mohanram.ko
பாண்டிச்சேரியன்ஸ்-கொரோனா சமயத்துல ஜி விளக்கேத்த சொல்லும் போது, அப்ப புரியல. ஆனா இப்ப புரியுது….

பாலசுப்ரமணி
“நான் படிச்சதெல்லாம் வரவே இல்லைங்க டீச்சர் “
“பொன்னியின் செல்வன் படத்துலயா?”
“இல்லைங்க டீச்சர் நேத்து எழுதுன பரீட்சையில”
Mannar & company
முந்தைய நாளே சரக்கை வாங்கி வைத்து சேமிப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவர்கள்தான் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்!

லாக் ஆப்
Comments are closed.