நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட டீ சொல்லிட்டு அவருக்கிட்ட பேச்சு கொடுத்தேன்.
நாளைக்கு பட்ஜெட் தாக்கல் பண்ண போறாங்க. இந்த பட்ஜெட்லையாவது நல்ல விதமா நாலு அறிவிப்பு வருமான்னு கேட்டேன்.
அதெல்லாம் எதுவும் வராது நண்பா. வீனா மனச போட்டு குழப்பிக்காதீங்க. பத்து வருஷமா கொடுத்த அதே அல்வா தான் இந்த முறையும் கிடைக்கும்னு சொன்னாப்ல…
அப்புறம் ரெண்டு பேரும் டீயை குடிச்சிட்டு, அங்க இருந்து கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
இந்திய குடும்பங்கள் பல கஷ்டத்தில் இல்லை மாறாக
முதலீடு செய்து வருகின்றன -தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்.
யாரா இருக்கும்?!
ஒருவேளை
அம்பானி குடும்ப திருமண முதலீட்டை சொல்லுறாரோ.
Mannar & company™
நமக்காக நேரத்தை செலவிடுவதாலேயே எப்பொழுதும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம்
கடிகாரங்களை!
வசந்த்
“நாங்கெல்லாம்” என்று தொடங்கி தெரியுமா என்று முடிகிறது தற்பெருமை.
ச ப் பா ணி
சுருங்கிய பின்
விளங்க வைத்துவிடுகிறது
விலை மலிவு துணிகள்.
Writer SJB
ஒரு விஷயத்தை மறப்பதற்கு அந்த விஷயம் ஞாபகம் வரும் போது சாப்பிட உட்கார்ந்துடனும்
ஒரு நபரை மறப்பதற்கு அவங்க நம்பரை செல்போனில் இருந்து டெலிட் பண்ணிடனும்.
balebalu
முழு கொள்ளளவை எட்டியது கேஆர்எஸ் அணை
காவிரியில் 77,000 கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகா – செய்தி
நெல்லுக்கு இறைக்கும் நீர் ஆங்கே
புல்லுக்கும் பாயுமாம் ன்னு
சும்மாவா சொன்னாங்க?!
–லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் மீண்டும் மினி பஸ்… போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு!
ஆம்ஸ்ட்ராங் கொலை…ரவுடியின் வங்கி கணக்கு ஆய்வு!
நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!
யோகி Vs மோடி…யோகியின் முதல்வர் பதவி பறிப்பா?… அகிலேஷ் கொடுத்த ஆஃபர்!