சேலத்துல ஃப்ரெண்டு ஒருத்தனுக்கு கல்யாணம். கடைசி நேரத்துல அடிச்சி புடிச்சி சென்னையில இருந்து நாங்க நாலு பேரு கார்ல கிளம்புனோம். ஆபிஸ்ல இருந்து கடைசி நேரத்துல கிளம்புனதால இரண்டு பேரு டையர்டுல படுத்து தூங்கிட்டானுங்க…
வண்டி ஓட்டுற ஃபிரெண்டு கூட நான் பேச்சு கொடுத்துக்கிட்டே கார்ல போய்க்கிட்டு இருந்தோம். சேலம் பக்கத்துல கார் ரீச் ஆனதும், கூகுள் மேப்ல ரொம்ப நேரமா கார் ஓட்டுன நண்பர் எதையோ தேடிக்கிட்டு இருந்தான்.
“இவ்வளவு நேரமா கூகுள் மேப்ல என்னத்த தேடிக்கிட்டு இருக்கன்னு” கேட்டேன்…
“இல்ல… இந்தியா வளர்ச்சி பாதையில போகுதுன்னு மோடி இன்னைக்கு பார்லிமெண்ட்ல சொன்னாப்ல அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்னு” கமெண்ட் அடிச்சான்.
“கடைசி வரை நீ அந்த பாதையை கண்டுபிடிக்க முடியாது….ஒழுங்கா கரெக்டான அட்ரச போட்டு கல்யாண வீட்டுக்கு போற வழிய பாருன்னு” அவன்கிட்ட சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
இந்தியாவுக்கான புதிய திசையை காட்டுவதற்கு 15 லட்சம் பேரிடம் அறிவுரைகள் பெற்றுள்ளேன் – பிரதமர்
அதுல எல்லாருக்கும் தர்றதா சொன்ன 15 லட்சம் ரூபாய் இருக்கும் திசையையும் சேர்த்துக்குங்க…
நெல்லை அண்ணாச்சி
புதிய இந்தியாவை கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது! – பிரதமர் மோடி!
# I.N.D.I.A. வுக்கு ஓட்டு போட சொல்லுதாரோ….!!
சரவணன். 𝓜
கடந்து செல்லும் பாதையை அழகாய்க் கடந்து சென்று விடுங்கள்.
மீண்டும் நடக்க நினைக்க நினைக்காதீர்கள்..
எல்லாத்தையும் பள்ளம் தோண்டி வைத்து விடுவார்கள், இந்த ஹைவேஸ்காரர்களும் கார்ப்பரேஷன்காரர்களும்..!
ச ப் பா ணி
தனித்து நிற்பது வேறு… தனித்து விடப்பட்டது வேறு
கூட்டணி பேரங்கள்
Black Cat 2
Feb 14 வேற வருது உனக்கு என்ன வேணுமோ கேளு வாங்கிதறேன்..
GF – முடிஞ்சா பூண்டு 2 kg வாங்கி கொடு….
அதுவும் Gift தான்டா..
mohanram. k
உயிர் நண்பன் – வாழ்வோ, சாவோ கடைசி வரை உன் கூடவே இருப்பேன்டா
உருப்புட விடவே மாட்டயாடா!
நெல்லை அண்ணாச்சி
உலக பணக்காரர்களில் அதானி 12-வது இடம்…
# தேர்தலுக்கு முன்னாடி 1-வது இடம் வந்திடலாம்…!!
Let me play first..🐘😅 pic.twitter.com/Ai0zg7mrKA
— 𝕐o̴g̴ (@Yoda4ever) February 9, 2024
கடைநிலை ஊழியன்
மச்சான் சொன்னா புரிஞ்சுக்கோ டா.. நீ உன் ஆள சர்ப்ரைஸ் பண்ணனும் னு நினைக்குறது எல்லாம் சரி தான்..
ஆனா உனக்கு டெடிபியர் வேஷம் எல்லாம் போட முடியாது.. எருமை மாடு வேஷம் வேணும்னா போடலாம்..
-Teddyday
💯 True 😂😂😂😂😂 pic.twitter.com/N8qcfe7lVu
— James Stanly (@JamesStanly) February 10, 2024
சரவணன். 𝓜
புதிய இந்தியாவை கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது! – பிரதமர் மோடி!
மறுபடியும் முதல்ல இருந்தா?
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாரத ரத்னா விருது கொடுத்துட்டால், அவங்களும் பாஜக கூட்டணி
யில் சேர்ந்துடுவாங்களான்னு கேட்கிறாம்பா…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி
எலெக்ஷன் ஃப்ளாஷ்: விஜய் புது கட்சி… திமுக மாசெக்களுக்கு திடீர் உத்தரவு!