என் இனிய மதுரை மக்களே…: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

மதுரை தாண்டி ஒரு தியேட்டர்ல  திருச்சிற்றம்பலம் படம் பாத்துக்கிட்டிருந்தோம்.   எப்ப பாரு பாரதி ராஜாவும் தனுஷும்  பீர் குடிச்சுக்கிட்டே பேசிக்கிட்டிருந்தாங்க. அப்ப முன் வரிசையில உக்காந்திருந்த ரெண்டு அக்மார்க் மதுரைக்கார அம்மாங்க பேசிக்கிட்டிருந்தாங்க.

ஒரு அம்மா பாரதிராஜாவை காட்டி, ‘இவருக்குதாம்புள்ள உடம்பு சரியில்லையாம், ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்க’ அப்படினு சொன்னாங்க. அப்ப இன்னொரு அம்மா, ‘இந்த வயசுல பேரப் புள்ளைகளோட சேர்ந்து குடிக்கலாமா….

அதான்  ஆஸ்பத்திரில சேர்த்துக்காவோ’னுச்சு. படத்துல வந்த காமெடிய விட  என் இனிய மதுரை மக்கள் சொன்ன இந்த காமெடிய நான் ரசிச்சேன். நீங்க அப்டேட் பாருங்க…

balebalu
சரியான பொருளாதார கொள்கை , புவிசார் அரசியலில் மறுசீரமைப்பு செய்தால் ஜெர்மனி , ஜப்பானை முந்தும் இந்தியா: SBI கணிப்பு
பொருளாதார சீரமைப்பு இருக்கட்டும் வங்கி ஊழியர்கள் முதலில் ‘கடு கடுப்பு’ முகத்தை மாற்றி ‘புன்னகை முகமா ‘ சீரமைப்பு செய்யுங்க

appar appar

தேர்தல் பணிக்கும், கழக பணிக்கும், கள பணிக்கும் பூத் ஏஜெண்டுக்கும் டிஎன்பிஎஸ்சி வைத்து தேர்ந்தெடுங்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களே…

மயக்குநன்
காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதிமுறைப்படி நடக்கும்!- அஜய் மாக்கான்.
அப்பவாது… கட்சியோட ‘தலைவிதி’ சரியாகுதான்னு பார்ப்போம்..!

தர்மஅடி தர்மலிங்கம்

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல – மத்திய நிதியமைச்சர் விளக்கம். அப்போ…. அதுக்கும் நல்ல நேரம் பாத்துக்கிட்டு தான் இருக்காங்களா..?

சரவணன். 𝓜
`கேரளாவுக்கு எதிர்காலம் இருக்குமானால் அது பாஜக-தான்!” – அமித் ஷா
அது சரி.. கேரளா இருக்குமா!?

amudu
அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை கொண்டுசென்று உயிர்களை காக்க உதவுகிறது விரைவு நெடுஞ்சாலைகள். -நிதின் கட்கரி.
டோல் கேட் கட்டணம் கட்டச் சொல்லி, மக்கள் உயிரையும் இல்ல எடுக்குது.

தர்மஅடி தர்மலிங்கம்
ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஏன் ஆஜராகவில்லை?ஆர்.பி.உதயகுமார்

இந்தக் கேள்வியை அப்பவே நீங்க ஏன் கேட்கலை..??

மயக்குநன்
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்!- புகழேந்தி.
அப்ப… இபிஎஸ் பக்கம் உள்ளதெல்லாம் அமமுக தொண்டர்களா இருக்குமோ..?!

amudu
உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 5-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா.
ஜி. எஸ்.டி இருக்கும் போது என்ன கவலை. முதல் இடத்துக்கு கூட வருவீங்க.

சரவணன். 𝓜
உண்மையான கலைக்கு பாராட்டோ, விருதோ சரியான நேரத்தில் வரணும்…” – நடிகர் சித்தார்த், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கேக்க மறந்துட்டார் போல…

Selva Selvaraj

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த அற்புதமான ஒரு நிகழ்வு இது..
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்
போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் “வபாஃ” என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார்.கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க ” நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களை பிரித்துப் பார்த்தேன்.
அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த “வபாஃ” வின் பெயரையே எழுதியிருந்தனர்”. என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
“தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்

லாக் ஆப்

+1
0
+1
2
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *